ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் ‘காசிம்’ என்று பெயர் சூட்டினார். அப்போது மற்ற அன்சாரித் தோழர்கள், ‘உம்மை நாங்கள் அபுல் காசிம் (காசிமின் தந்தை) என்று குறிப்புப் பெயரால் அழைக்கவும் மாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உமக்கு மகிழ்ச்சியூட்டவும் மாட்டோம்’ என்று கூறினார்கள்.
அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு நான் ‘காசிம்’ என்று பெயர் சூட்டினேன். அன்சாரித்தோழர்கள், ‘உம்மை நாங்கள் ‘அபுல் காசிம்’ என்ற குறிப்புப் பெயரால் அழைக்கவும் மாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உமக்கு மகிழ்ச்சியூட்டவும் மாட்டோம்’ என்று கூறிவிட்டார்கள்’ என்றார்.
அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘அன்சாரிகள் நல்ல வேலை செய்தார்கள். எனவே, என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், என்னுடைய (அபுல் காசிம் என்னும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளாதீர்கள். ஏனெனில், நான் பங்கிடுபவனே’ என்று கூறினார்கள்.
Book :57
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ قَالَ
وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ القَاسِمَ، فَقَالَتِ الأَنْصَارُ لاَ نَكْنِيكَ أَبَا القَاسِمِ، وَلاَ نُنْعِمُكَ عَيْنًا، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ وُلِدَ لِي غُلاَمٌ، فَسَمَّيْتُهُ القَاسِمَ فَقَالَتِ الأَنْصَارُ: لاَ نَكْنِيكَ أَبَا القَاسِمِ، وَلاَ نُنْعِمُكَ عَيْنًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْسَنَتِ الأَنْصَارُ، سَمُّوا بِاسْمِي وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي، فَإِنَّمَا أَنَا قَاسِمٌ»
சமீப விமர்சனங்கள்