பாடம் : 14
திம்மீ- இஸ்லாமிய அரசின் பிரஜையான பிற மதத்தவர்- ஒருவர் சூனியம் செய்தால் மன்னிக்கப்படுவாரா?
யூனுஸ் பின் யஸீத் அல்-அய்லீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், இஸ்லாமிய அரசின் பிரஜைகளான பிற மதத்தார் சூனியம் செய்தால் அவர்களைக் கொல்ல வேண்டுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவ்வாறு (சூனியம்) செய்யப்பட்டது என்றும், சூனியம் செய்தவன் வேதம் வழங்கப்பட்ட (யூத) சமுதாயத்தைச் சேர்ந்தவனாக இருந்தும் அவனை அதற்காக நபி (ஸல்) அவர்கள் கொல்லவில்லை என்றும் நமக்குச் செய்தி கிடைத்துள்ளது என்று பதிலளித்தார்கள்.
ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது.
Book : 58
بَابٌ: هَلْ يُعْفَى عَنِ الذِّمِّيِّ إِذَا سَحَرَ
وَقَالَ ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، سُئِلَ: أَعَلَى مَنْ سَحَرَ مِنْ أَهْلِ العَهْدِ قَتْلٌ؟ قَالَ: بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ صُنِعَ لَهُ ذَلِكَ فَلَمْ يَقْتُلْ مَنْ صَنَعَهُ، وَكَانَ مِنْ أَهْلِ الكِتَابِ
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُحِرَ، حَتَّى كَانَ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ صَنَعَ شَيْئًا وَلَمْ يَصْنَعْهُ»
சமீப விமர்சனங்கள்