தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3199

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 3

விண்மீன்கள்.

கத்தாதா (ரஹ்) அவர்கள்கூறினார்கள்:

‘‘நாம் (உங்களுக்கு) அருகிலிருக்கும் (முதல்) வானத்தை விளக்குகளால் அலங்கரித்திருக்கிறோம். அவற்றை ஷைத்தான்களை எறிந்து விரட்டும் கருவிகளாக ஆக்கியுள்ளோம். இந்த ஷைத்தான்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்துவைத்திருக்கிறோம்” (67:5) எனும் வசனங்களிலிருந்து தெரிவதாவது: அல்லாஹ் இந்த நட்சத்திரங்களை மூன்று விஷயங்களுக்காகப் படைத்திருக்கிறான்:

1. அவற்றை வானத்திற்கு அலங்காரமாக ஆக்கியுள்ளான்.

2. ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவியாக ஆக்கியுள்ளான்.

3. அவற்றின் வாயிலாக (கடல் மார்க்கத்தில்) வழியறிந்து கொள்வதற்கான அடையாளங்களாக அவற்றை ஆக்கியுள்ளான்.

எவர் இதுவல்லாத பிற பொருள்களை இந்த வசனத்திற்குக் கற்பிக்கிறாரோ அவர் தவறிழைத்துவிட்டார்; தமது முயற்சியை வீணாக்கிவிட்டார்; தாம் அறியாத விஷயத்தில் ஈடுபட்டுத் தம்மைத்தாமே சிரமத்திற்கு ஆளாக்கிக்கொண்டார்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

‘‘அது சருகாக (ஹஷீம்) மாறியது” (18:45) எனும் வசனத்தில் ஹஷீம்’ என்பதற்கு மாறிப்போனது’ என்பது பொருள். (80:31 ஆவது வசனத்தில் உள்ள) ‘அப்பு’ என்பது கால்நடைகள் உண்ணும் (வைக்கோல் போன்ற) தீவனத்தைக் குறிக்கும். (55:10 ஆவது வசனத்திலுள்ள) ‘அனாம்’ என்பதற்கு படைப்புகள்’ என்றும், (25:53 ஆவது வசனத்திலுள்ள) பர்ஸக்’ என்பதற்கு தடுப்பு’ (தடை) என்றும் பொருளாகும்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

(78:16 ஆவது வசனத்திலுள்ள) ‘அல்ஃபாஃப்’ என்பதற்கு, ‘அடர்த்தியானவை’ என்பது பொருள். (80:30ல் உள்ள) ஃகுல்ப்’ என்பதற்கும் ‘அடர்த்தியானவை’ என்பதே பொருள். (2:22ல் உள்ள) ஃபிராஷ்’ என்பதற்கு விரிப்பு’ (தொட்டில்) என்பது பொருள். (‘‘உங்களுக்குப் பூமியில் வசிப்பிடம் உண்டு’ (2:36) என்கிறான் அல்லாஹ்-அதுபோன்று) . (7:58ல் உள்ள) நகித்’ என்பதற்கு குறைவானது’ என்பது பொருள்.

பாடம்: 4

சூரியன் மற்றும் சந்திரனின் நிலை.

அல்லாஹ் கூறுகின்றான்:

சூரியனும் சந்திரனும் (அதனதன்) கணக்குப்படி இயங்குகின்றன. (55:5)

(பி ஹுஸ்பான்) என்பதற்கு முஜாஹித் (ரஹ்) அவர்கள், திருகை சுற்றுவதைப் போன்று ஒரு கணக்கின்படி சுற்றுகின்றன என்று விளக்கமளித்தார்கள். மற்றவர்கள் கூறுகிறார்கள்: ஒரு கணக்கின்படி தத்தமது நிலைகளை மீறாமல் அவை சுழல்கின்றன. ஹுஸ்பான்’ என்பதற்கு கணக்குக் குழு’ என்ற பொருளும் உண்டு. இது வாய்ப்பாட்டில் ஷிஹாப், ஷுஹ்பான் என்பதைப் போல உள்ளது.

சூரியன்மீதும் அதன் ஒளியின் மீதும் ஆணையாக! (91:1). இங்கு ஒளி’ என்பதைக் குறிக்க ளுஹா’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. சூரியனால் சந்திரனை அடைய முடியாது; இரவு பகலை முந்தாது. (36:40). அதாவது அவ்விரண்டில் ஒன்றின் ஒளி மற்றொன்றை மறைக்காது; அது அவற்றுக்குச் சாத்தியமும் அல்ல. (சூரியனின் ஒளியைப் பிரதிபலிப்பதே சந்திரனாகும்.) இரவும் பகலும் ஒன்றையொன்று துரத்தாது. (அதனதன் நேரத்தில் வரும்.) இரவிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம் (36:37). அதாவது அவை இரண்டில் ஒன்றை மற்றதிலிருந்து வெளியேற்றுகிறோம்; ஒவ்வொன்றையும் தனித்தனியாக இயங்கச் செய்கிறோம். (அன்று) வானம் பிளந்துவிடும். அது உறுதியற்றதாகிவிடும்; வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். (69:16,17). அதாவது அதன் பிளவுதான் அதன் உறுதியற்ற நிலையாகும். அது பிளக்காமல் இருக்கும்வரை அதன் இரு புறங்களில் வானவர்கள் இருப்பார்கள். கிணற்றின் ஓரங்கள் (கரைகள்) என்பதைப் போல. அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான் (79:29). மூடுதல்’ என்பதைக் குறிக்க ‘அஃக்த்த” எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. அவரை இரவு சூழ்ந்தபோது… (6:76). அதாவது இருட்டியபோது…

சூரியன் சுருட்டப்படும்போது… (81:1). அதாவது அதன் ஒளி மங்கும்போது… என்று ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.

இரவின் மீதும் அது உள்ளடக்கியவற்றின் மீதும் அதாவது அது ஒன்று சேர்த்துள்ள உயிரினங்கள்மீதும் முழுமை பெற்ற நிலவின் மீதும் அதாவது சீரான நிலவின் மீதும் சத்தியமாக! (84:17,18) வானத்தில் புரூஜ்களை அதாவது சூரியன், சந்திரன் ஆகியவற்றுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியவன் வளமிக்கவன். (25:61).

நிழலும் வெப்பமும் (ஹரூர்) அதாவது சூரியனுடன் பகலில் வரும் வெப்பமும் சமமாகாது. (35:21) இப்னு அப்பாஸ் (ரலி), ரூபா பின் அல்அஜ்ஜாஜ் (ரஹ்) ஆகியோர், இரவு வெப்பத்தை ஹரூர்’ என்றும், பகல் வெப்பத்தை சமூம்’ என்றும் குறிப்பிடுகின்றனர். ‘அந்தரங்க நண்பர்கள்’ (வலீஜா) (9:16). அதாவது ஒன்றுக்குள் ஒன்றை வைத்து மறைக்கப்பட்ட அனைத்தும் வலீஜா ஆகும்.

 அபூதர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும்,அவனது தூதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது.

அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘வந்த வழியே திரும்பி விடு’ என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்’ என்றார்கள். இதைத் தான், ‘சூரியன், தான் நிலை கொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்’ என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது’ என்றார்கள்.

அத்தியாயம்: 59

(புகாரி: 3199)

بَابٌ فِي النُّجُومِ
وَقَالَ قَتَادَةُ: {وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ} [الملك: 5] خَلَقَ هَذِهِ النُّجُومَ لِثَلاَثٍ: جَعَلَهَا زِينَةً لِلسَّمَاءِ، وَرُجُومًا لِلشَّيَاطِينِ، وَعَلاَمَاتٍ يُهْتَدَى بِهَا، فَمَنْ تَأَوَّلَ فِيهَا بِغَيْرِ ذَلِكَ أَخْطَأَ، وَأَضَاعَ نَصِيبَهُ، وَتَكَلَّفَ مَا لاَ عِلْمَ لَهُ بِهِ وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {هَشِيمًا} [الكهف: 45]: مُتَغَيِّرًا، وَالأَبُّ مَا يَأْكُلُ الأَنْعَامُ وَالأَنَامُ: الخَلْقُ، {بَرْزَخٌ} [المؤمنون: 100]: حَاجِبٌ وَقَالَ مُجَاهِدٌ: {أَلْفَافًا} [النبأ: 16]: مُلْتَفَّةً، وَالغُلْبُ: المُلْتَفَّةُ {فِرَاشًا} [البقرة: 22]: مِهَادًا: كَقَوْلِهِ {وَلَكُمْ فِي الأَرْضِ مُسْتَقَرٌّ} [البقرة: 36]، {نَكِدًا} [الأعراف: 58]: قَلِيلًا
بَابُ صِفَةِ الشَّمْسِ وَالقَمَرِ بِحُسْبَانٍ
قَالَ مُجَاهِدٌ: «كَحُسْبَانِ الرَّحَى» وَقَالَ غَيْرُهُ: بِحِسَابٍ وَمَنَازِلَ لاَ يَعْدُوَانِهَا، ” حُسْبَانٌ: جَمَاعَةُ حِسَابٍ، مِثْلُ شِهَابٍ وَشُهْبَانٍ ” {ضُحَاهَا} [النازعات: 29]: «ضَوْءُهَا»، {أَنْ تُدْرِكَ القَمَرَ} [يس: 40] «لاَ يَسْتُرُ ضَوْءُ أَحَدِهِمَا ضَوْءَ الآخَرِ، وَلاَ يَنْبَغِي لَهُمَا ذَلِكَ» {سَابِقُ النَّهَارِ} [يس: 40]: «يَتَطَالَبَانِ، حَثِيثَيْنِ»، {نَسْلَخُ} [يس: 37]: «نُخْرِجُ أَحَدَهُمَا مِنَ الآخَرِ وَنُجْرِي كُلَّ وَاحِدٍ مِنْهُمَا»، {وَاهِيَةٌ} [الحاقة: 16]: «وَهْيُهَا تَشَقُّقُهَا»، {أَرْجَائِهَا} [الحاقة: 17]: ” مَا لَمْ يَنْشَقَّ مِنْهَا، فَهُمْ عَلَى حَافَتَيْهَا، كَقَوْلِكَ: عَلَى أَرْجَاءِ البِئْرِ “، {أَغْطَشَ} [النازعات: 29] وَ {جَنَّ} [الأنعام: 76]: «أَظْلَمَ» وَقَالَ الحَسَنُ: {كُوِّرَتْ} [التكوير: 1]: «تُكَوَّرُ حَتَّى يَذْهَبَ ضَوْءُهَا»، {وَاللَّيْلِ وَمَا وَسَقَ} [الانشقاق: 17]: «جَمَعَ مِنْ دَابَّةٍ»، {اتَّسَقَ} [الانشقاق: 18]: «اسْتَوَى»، {بُرُوجًا} [الحجر: 16]: «مَنَازِلَ الشَّمْسِ وَالقَمَرِ»، {الحَرُورُ} [فاطر: 21]: «بِالنَّهَارِ مَعَ الشَّمْسِ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ، وَرُؤْبَةُ: «الحَرُورُ بِاللَّيْلِ، وَالسَّمُومُ بِالنَّهَارِ» يُقَالُ: {يُولِجُ} [الحج: 61]: «يُكَوِّرُ»، {وَلِيجَةً} [التوبة: 16] «كُلُّ شَيْءٍ أَدْخَلْتَهُ فِي شَيْءٍ»

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:

قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لِأَبِي ذَرٍّ حِينَ غَرَبَتِ الشَّمْسُ: «أَتَدْرِي أَيْنَ تَذْهَبُ؟»، قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: ” فَإِنَّهَا تَذْهَبُ حَتَّى تَسْجُدَ تَحْتَ العَرْشِ، فَتَسْتَأْذِنَ فَيُؤْذَنُ لَهَا وَيُوشِكُ أَنْ تَسْجُدَ، فَلاَ يُقْبَلَ مِنْهَا، وَتَسْتَأْذِنَ فَلاَ يُؤْذَنَ لَهَا يُقَالُ لَهَا: ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ، فَتَطْلُعُ مِنْ مَغْرِبِهَا، فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: {وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ العَزِيزِ العَلِيمِ} [يس: 38]


Bukhari-Tamil-3199.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3199.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  • இந்த செய்திக்கு சிலர், எல்லாப் பொருளும் அல்லாஹ்வின் அர்ஷுக்கு கீழே உள்ளது என்பதால் சூரியன் அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் ஸஜ்தா செய்வது என்பது தவறான கருத்தல்ல என்றும், ஸஜ்தா செய்கிறது என்பதின் கருத்து அல்லாஹ்வின் கட்டளைப்படியே அது இயங்குகின்றது என்றும் விளக்கம் கூறுகின்றனர்.
  • என்றாலும் இது உண்மைக்கு மாற்றமாக இருப்பதால் இது ஏற்கத்தக்க செய்தி அல்ல என்று வேறு சிலர் விமர்சிக்கின்றனர். காரணம் சூரியன் உண்மையில் மறையவில்லை. பூமியின் சுழற்சியால் தான் நமக்கு சூரியன் மறைகிறது. என்றாலும் பூமியின் வேறு பகுதியில் அது இருந்துக் கொண்டே இருக்கும். எனவே இறைச் செய்தி இப்படி தவறான கருத்தைத் தராது என்பதால் இது சரியான செய்தி அல்ல என்று கூறுகின்றனர்.

1 . இந்தக் கருத்தில் அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-, புகாரி-31994802480374247433 ,  முஸ்லிம்-250251 , அபூதாவூத்-4002 , திர்மிதீ-2186 , 3227 , முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-,

…முஸ்னத் பஸ்ஸார்-,

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் விரிவாக பிறகு சேர்க்கப்படும்.

5 comments on Bukhari-3199

  1. இது நடைமுறை அறிவியலுக்கு மாற்றமாக கருத்து சொல்கின்ற செய்தி அல்லவா ? இதற்கு ஸஹீஹ் என்ற தரம் கொடுப்பது தவறாகும்

    இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து இது அருளப்பட்டது.
    [அல்குர்ஆன் 41:42]

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இந்த செய்தியை அசல் கருத்தில் புரிந்துக்கொள்ளக்கூடாது. இதன் மூலம் சூரியன் உட்பட அனைத்தும் அல்லாஹ்வின் கட்டைளையின் பிரகாரமே இயங்குகிறது என்று கூறுவதே நோக்கம்.

      இதன் பொருள் :

      நபி(ஸல்) சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம் வந்து
      அது எங்கு செல்கிறது என்று உனக்கு தெரியுமா? என்றார்கள். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதருமே
      இதனை அறிவார்கள் என்றேன். அது இறைவனின்
      அதிகாரத்துக்குட்பட்ட இடத்தில் இயங்கிக் கொண்டு
      தொடர்ந்து இயங்க அனுமதி கேட்கிறது. அனுமதி
      அளிக்கப்படுகிறது. ஒருநாள் அதன் அனுமதி
      ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. வந்த வழியே
      திரும்பி சென்றுவிடு என்றுக் கூறப்படும். அதன்படி
      அது மேற்கிலிருந்து உதயமாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

      அர்ஷின் கீழ் என்பதற்கு சிலர் இவ்வாறு பொருள் கூறுகின்றனர்.

    2. அஸ்ஸலாமு அலைக்கும். இந்த செய்தியை மறு ஆய்வு செய்கிறோம். தங்களிடம் இந்த ஹதீஸின் கருத்து குறித்த மேலதிக தகவல்கள் இருந்தால், அதை இங்கு பதிவு செய்யவும்.

    3. வானங்களிலுள்ளவாகளும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அலலாஹ்வுக்கு ஸுஜூது செய்கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? (22:18)

      இந்த குர்ஆன் வசனத்திற்கு எவ்வாறு அர்த்தம் கொடுப்பீர்களோ அதே போன்று அர்த்தத்தை கொடுத்தால் எந்த பிரச்சனையும் இல்லை.

  2. சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி பூமியை வந்தடைய ஏறத்தாழ எட்டு நிமிடங்கள் ஆகும். இது நிறுபிக்கப்பட்ட அறிவியல் உண்மை. இப்போது நாம் பார்ப்பது 8 நிமிடத்திற்கு முன்பு உள்ள சூரியனைதான்.

    https://sunearthday.nasa.gov/2007/locations/ttt_sunlight.php

    பொதுவாக வானவியல் சம்பந்தமான அறிவியல் என்பது முற்று பெறவில்லை சூனியனை விட தொலைவில் உள்ள நட்சதிரங்கள் வெடிப்பை நாம் தற்பொழுது பார்ப்பது 30 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தவை என அறிவியல் சொல்கிறது.

    சூரியன் பூமி படக்கும் முன்னரே அல்லாஹ் இத்தனை நாட்களில் படைத்தேன் என்று காலத்தை குறிப்பிடுகிறான். ஆக காலம் என்பது இந்த பூமியை தாண்டி சென்றால் அது மாறுபடும் ஆக இதை வைத்து ஒரு ஹதீஸை மறுப்பது என்பது ஒரு நியாயமான நிலை இல்லை.

    கண்ணை மூடி திறக்கும் நேரத்தில் எங்கேயோ உள்ள ஒரு நாற்காளியை கொண்டுவருவதற்கு ஜின்னுக்கு ஆற்றல் கொடுத்த அல்லாஹ். சூரியனை கண்ணை முடிவதற்குள் அர்ஷ்ஷிக்கு சென்றுவர சக்தி கொடுக்க மாட்டானா?

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.