தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3232

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூஇஸ்ஹாக் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(வேத அறிவிப்பு நின்றுபோயிருந்த இடைப்பட்ட காலத்தில் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களை நெருங்கிவர) அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலுள்ள நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக இருந்தது. பிறகு அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அல்லாஹ் அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார். (53: 9,10)” என்னும் இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன்.

அப்போது அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலுக்கு அறு நூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைக் கண்டார்கள்” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள் என விளக்கினார்கள்.44

அத்தியாயம் : 59

(புகாரி: 3232)

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الشَّيْبَانِيُّ، قَالَ:

سَأَلْتُ زِرَّ بْنَ حُبَيْشٍ عَنْ قَوْلِ اللَّهِ تَعَالَى {فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى. فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى} [النجم: 10] قَالَ: حَدَّثَنَا ابْنُ مَسْعُودٍ: أَنَّهُ «رَأَى جِبْرِيلَ، لَهُ سِتُّمِائَةِ جَنَاحٍ»


Bukhari-Tamil-3232.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3232.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  • இது நபித்தோழரின் கூற்று என்றாலும் இது போன்ற செய்திகளை நபித்தோழர் ஆய்வு செய்தோ, அல்லது மற்ற வேதக்காரர்களிடமிருந்து கேட்டோ கூறியிருக்கமாட்டார். நபி (ஸல்) அவர்களிடமிருந்தே இந்த விளக்கத்தை பெற்றிருப்பார் என்பதால் இது போன்ற செய்திகளை ஹதீஸ்கலை அறிஞர்கள் சரியானது என்று கூறுகின்றனர்.

1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸிர்ரு பின் ஹுபைஷ் —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க: அஹ்மத்-3780 , 3915 , 4396 , புகாரி-3232 , 48564857 , முஸ்லிம்-280281282 , திர்மிதீ-3277 ,

  • அஃமஷ் —> இப்ராஹீம் —> அல்கமா —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க: அஹ்மத்-4289 , புகாரி-32334858 ,

  • அபூஇஸ்ஹாக் —> அப்துர்ரஹ்மான் பின் யஸீத் —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க: அஹ்மத்-3740 , 3971 , திர்மிதீ-3283 ,

2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-3234 .

3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-283 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.