தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3339

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமையில் நூஹ் அவர்களும் அவர்களின் சமுதாயத்தினரும் வருவார்கள். அப்போது அல்லாஹ் (நூஹ் – அலை – அவர்களை நோக்கி), ‘(என்னுடைய செய்தியை நீங்கள் உங்கள் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்து விட்டீர்களா?’ என்று கேட்பான். அதற்கு நூஹ் அவர்கள், ‘ஆம், என் இறைவா! (எடுத்துரைத்து விட்டேன்)’ என்று பதிலளிப்பார்கள்.

பிறகு, அல்லாஹ் நூஹ் அவர்களின் சமுதாயத்தினரிடம், ‘இவர் உங்களுக்கு (என் செய்தியை) எடுத்துரைத்துவிட்டாரா?’ என்று கேட்பான். அதற்கு அவர்கள், ‘இல்லை. எங்களிடம் எந்த இறைத்தூதரும் வரவில்லை’ என்று பதில் கூறுவார்கள். உடனே, அல்லாஹ் நூஹ் அவர்களிடம் ‘உங்களுக்காக சாட்சியம் சொல்பவர் யார்?’ என்று கேட்பான். நூஹ் அவர்கள், ‘முஹம்மத்(ஸல்) அவர்களும், அவர்களின் சமுதாயத்தினரும் (எனக்காக சாட்சியம் சொல்வார்கள்)’ என்று பதிலளிப்பார்கள்.

அவ்வாறே நாம் நூஹ் அவர்கள் (இறைச் செய்தியைத் தம் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்து விட்டார்கள் என்று சாட்சியம் சொல்வோம்.

‘அவ்வாறே உங்களை மக்களுக்கு சாட்சியம் சொல்வதற்காக நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம்’ என்னும் புகழுயர்ந்த இறைவனின் (திருக்குர்ஆன் 02:143) வசனம் இதைத் தான் குறிக்கிறது.

‘நடுநிலையான’ என்னும் சொல்லின் கருத்து ‘நீதியான’ என்பதாகும். என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book :60

(புகாரி: 3339)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

يَجِيءُ نُوحٌ وَأُمَّتُهُ، فَيَقُولُ اللَّهُ تَعَالَى، هَلْ بَلَّغْتَ؟ فَيَقُولُ نَعَمْ أَيْ رَبِّ، فَيَقُولُ لِأُمَّتِهِ: هَلْ بَلَّغَكُمْ؟ فَيَقُولُونَ لاَ مَا جَاءَنَا مِنْ نَبِيٍّ، فَيَقُولُ لِنُوحٍ: مَنْ يَشْهَدُ لَكَ؟ فَيَقُولُ: مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُمَّتُهُ، فَنَشْهَدُ أَنَّهُ قَدْ بَلَّغَ، وَهُوَ قَوْلُهُ جَلَّ ذِكْرُهُ: وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَالوَسَطُ العَدْلُ


Bukhari-Tamil-3339.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3339.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-11068 , 11271 , 11283 , 11558 , புகாரி-3339 , 4487 , 7349 , இப்னு மாஜா-4284 , திர்மிதீ-2961 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.