தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3388

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்

ஆயிஷா(ரலி) அவர்களைப் பற்றி அவதூறு பேசப்பட்டபோது (நடந்தவை பற்றி அவர்களின் தாயாரான) உம்மு ரூமான்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்.

நான் ஆயிஷாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது அன்சாரிப் பெண் ஒருத்தி எங்களிடம், ‘இன்னாரை (மிஸ்தஹ் இப்னு உஸாஸா – ரலி – அவர்களை) அல்லாஹ் நிந்திக்கட்டும்’ என்று கூறியபடி வந்தாள். நான், ‘ஏன் (இப்படிச் சொல்கிறாய்?’) என்று கேட்டேன். அதற்கு அவள், ‘(அவதூறுச்) செய்தியை அவர் (அறியாமையால் பரப்பி வருகிறார்’ என்று பதிலளித்தாள். ஆயிஷா(ரலி), ‘எந்த (அவதூறுச்) செய்தியை?’ என்று கேட்டார். அவள் அந்த அவதூறுச் செய்தியைத் தெரிவித்தாள். ஆயிஷா(ரலி), ‘இதை (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்களும் (என் கணவர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களும் செவியுற்றார்களா?’ என்று கேட்டார். நான், ‘ஆம் (செவியுற்றார்கள்)’ என்று பதில் சொன்னேன்.

உடனே, ஆயிஷா(ரலி) மூர்ச்சையடைந்து விழுந்து விட்டார்கள். பிறகு குளிர் காய்ச்சலுடன் தான், மூர்ச்சை தெளிந்து கண் விழித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் வந்து, ‘இவளுக்கென்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். நான், ‘தன்னைப் பற்றி பேசப்பட்ட அவதூறுச் செய்தியைக் கேள்விப்பட்ட காரணத்தால் காய்ச்சல் அவரைப் பீடித்துவிட்டது’ என்று பதிலளித்தேன். உடனே ஆயிஷா(ரலி) (படுக்கையிலிருந்து எழுந்து) உட்கார்ந்து, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் சத்தியம் செய்தாலும் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள். நான் (நடந்ததை எடுத்துச் சொல்லி) சமாதானப்படுத்தினாலும் நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள்.

எனக்கும் உங்களுக்கும் உவமை யஅகூப் – அலை – அவர்களுடையவும் அவர்களின் பிள்ளைகளுடையவும் நிலையாகும். (யஅகூப்(அலை)  அவர்கள் சொன்னது போன்றே) அல்லாஹ் தான் நீங்கள் (புனைந்து) கூறுபவற்றிக்கெதிராக உதவி கோரத் தகுதியானவன் ஆவான்’ என்று கூறினார்கள்.

உடனே நபி(ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றார்கள். அதைத் தொடர்ந்து அல்லாஹ், தான் அருளிய (ஆயிஷா(ரலி) நிரபராதி என்று அறிவிக்கும்) வசனத்தை அருளிட நபி(ஸல்) அவர்கள் அதை ஆயிஷாவுக்கு தெரிவித்தார்கள். அதைச் செவியுற்றவுடன் ஆயிஷா(ரலி) ‘(இதற்காக) அல்லாஹ்வுக்கு (மட்டுமே) நான் நன்றி செலுத்துகிறேன். வேறெவருக்கும் நன்றி செலுத்த மாட்டேன்’ என்று கூறினார்கள்.
Book :60

(புகாரி: 3388)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، قَالَ

سَأَلْتُ أُمَّ رُومَانَ، وَهِيَ أُمُّ عَائِشَةَ، عَمَّا قِيلَ فِيهَا مَا قِيلَ، قَالَتْ: بَيْنَمَا أَنَا مَعَ عَائِشَةَ جَالِسَتَانِ، إِذْ وَلَجَتْ عَلَيْنَا امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ، وَهِيَ تَقُولُ: فَعَلَ اللَّهُ بِفُلاَنٍ وَفَعَلَ، قَالَتْ: فَقُلْتُ: لِمَ؟ قَالَتْ: إِنَّهُ نَمَى ذِكْرَ الحَدِيثِ، فَقَالَتْ عَائِشَةُ: أَيُّ حَدِيثٍ؟ فَأَخْبَرَتْهَا. قَالَتْ: فَسَمِعَهُ أَبُو بَكْرٍ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: نَعَمْ، فَخَرَّتْ مَغْشِيًّا عَلَيْهَا، فَمَا أَفَاقَتْ إِلَّا وَعَلَيْهَا حُمَّى بِنَافِضٍ،

فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا لِهَذِهِ» قُلْتُ: حُمَّى أَخَذَتْهَا مِنْ أَجْلِ حَدِيثٍ تُحُدِّثَ بِهِ، فَقَعَدَتْ فَقَالَتْ: وَاللَّهِ لَئِنْ حَلَفْتُ لاَ تُصَدِّقُونِي، وَلَئِنِ اعْتَذَرْتُ لاَ تَعْذِرُونِي، فَمَثَلِي وَمَثَلُكُمْ كَمَثَلِ يَعْقُوبَ وَبَنِيهِ، فَاللَّهُ المُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ، فَانْصَرَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْزَلَ اللَّهُ مَا أَنْزَلَ، فَأَخْبَرَهَا، فَقَالَتْ: بِحَمْدِ اللَّهِ لاَ بِحَمْدِ أَحَدٍ





மேலும் பார்க்க: புகாரி-4143 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.