தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3478

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் (ஒரு காலத்தில்) ஒருவர் இருந்தார். அல்லாஹ் அவருக்கு செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கி விட்டபோது தன் மகன்களிடம், ‘உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்’ என்று கேட்டார். அவர்கள், ‘சிறந்த தந்தையாக இருந்தீர்கள்’ என்று பதில் கூறினர். அதற்கு அவர், ‘நான் நற்செயல் எதையும் செய்யவேயில்லை. எனவே, நான் இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள். பிறகு என்னைப் பொடிப் பொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவி விடுங்கள்’ என்று கூறினார்.

அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை (அவரின் உடல் அணுக்களை) அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) ‘இப்படிச் செய்ய உத்தரவிடும்படி உன்னைத் தூண்டியது எது?’ என்று கேட்டான். அவர், ‘உன் (மீது எனக்குள்ள) அச்சம் தான் (இப்படி உத்தரவிட என்னைத் தூண்டியது)’ என்று கூறினார். உடனே அவரைத் தன் கருணையால் அவன் அரவணைத்தான். இதை அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

இதே நபிமொழி அபூ ஸயீத்(ரலி) அவர்களிடமிருந்தே வேறொரு அறிவிப்பாளர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :60

(புகாரி: 3478)

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَبْدِ الغَافِرِ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

أَنَّ رَجُلًا كَانَ قَبْلَكُمْ، رَغَسَهُ اللَّهُ مَالًا، فَقَالَ لِبَنِيهِ لَمَّا حُضِرَ: أَيَّ أَبٍ كُنْتُ لَكُمْ؟ قَالُوا: خَيْرَ أَبٍ، قَالَ: فَإِنِّي لَمْ أَعْمَلْ خَيْرًا قَطُّ، فَإِذَا مُتُّ فَأَحْرِقُونِي، ثُمَّ اسْحَقُونِي، ثُمَّ ذَرُّونِي فِي يَوْمٍ عَاصِفٍ، فَفَعَلُوا، فَجَمَعَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، فَقَالَ: مَا حَمَلَكَ؟ قَالَ: مَخَافَتُكَ، فَتَلَقَّاهُ بِرَحْمَتِهِ

وَقَالَ مُعَاذٌ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَبْدِ الغَافِرِ، سَمِعْتُ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ





2 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-11096 , 11128 , 11664 , 11736 , புகாரி-3478 , 64817508 , முஸ்லிம்-53205321 ,

மேலும் பார்க்க: புகாரி-3481 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.