ரிப்யீ இப்னு ஹிராஷ்(ரஹ்) கூறினார்.
உக்பா(ரலி) , ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதை எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள். ஹுதைஃபா(ரலி) பின் வருமாறு சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘(மண்ணறையைத் தோண்டி கஃபன் துணியைத் திருடி விற்று வந்த) ஒரு மனிதருக்கு மரண (நேர)ம் வந்தது. அவர் இனி வாழ்வோம் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டபோது தம் குடும்பத்தினரிடம் தன் இறுதி விருப்பத்தைத் தெரிவித்தார்.
‘நான் இறந்துவிட்டால் எனக்கு நிறைய விறகுகளைச் சேகரித்து (சிதைக்குத்) தீமூட்டி விடுங்கள். அந்த நெருப்பு என் இறைச்சியைத் தின்று முடித்து என் எலும்பைச் சென்றடைந்து விட்டால், எரிந்து கருகிய எலும்புகளை எடுத்து அவற்றைப் பொடியாக்கி ஒரு வெப்பமான நாளில்… அல்லது காற்று அதிகம் வீசும் ஒரு நாளில்… என்னைக் கடலில் தூவி விடுங்கள்’ என்று கூறினார்.
(அவ்வாறே அவர்கள் செய்ய) அல்லாஹ் அவரை (அவரின் அணுக்களை) ஒன்று திரட்டி, (முழு உருவையளித்து), ‘ஏன் (இவ்வாறு) செய்தாய்?’ என்று கேட்டான். அவர், ‘உன் அச்சத்தால் தான்’ என்று கூறினார். எனவே, அவருக்கு அல்லாஹ் மன்னிப்பளித்தான்.
வேறொரு அறிவிப்பில், உக்பா(ரலி), ‘ஹுதைஃபா(ரலி) கூற கேட்டேன்.’ என்று கூறினார்கள்.
அதில் ‘வெப்பமான ஒரு நாளில்’ என்பதற்கு பதிலாக, ‘காற்று அதிகமாக வீசும் ஒரு நாளில்’ என்னும் வாசகம் இடம் பெற்றுள்ளது.
Book :60
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، قَالَ: قَالَ عُقْبَةُ لِحُذَيْفَةَ: أَلاَ تُحَدِّثُنَا مَا سَمِعْتَ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: سَمِعْتُهُ يَقُولُ
إِنَّ رَجُلًا حَضَرَهُ المَوْتُ، لَمَّا أَيِسَ مِنَ الحَيَاةِ أَوْصَى أَهْلَهُ: إِذَا مُتُّ فَاجْمَعُوا لِي حَطَبًا كَثِيرًا، ثُمَّ أَوْرُوا نَارًا، حَتَّى إِذَا أَكَلَتْ لَحْمِي، وَخَلَصَتْ إِلَى عَظْمِي، فَخُذُوهَا فَاطْحَنُوهَا فَذَرُّونِي فِي اليَمِّ فِي يَوْمٍ حَارٍّ، أَوْ رَاحٍ، فَجَمَعَهُ اللَّهُ فَقَالَ؟ لِمَ فَعَلْتَ؟ قَالَ: خَشْيَتَكَ، فَغَفَرَ لَهُ
قَالَ عُقْبَةُ: وَأَنَا سَمِعْتُهُ يَقُولُ: حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عَبْدُ المَلِكِ، وَقَالَ: «فِي يَوْمٍ رَاحٍ»
சமீப விமர்சனங்கள்