தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3452

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

 நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற கேட்டிருக்கிறேன்:

ஒரு மனிதருக்கு மரணம் வந்தது. அவருக்கு வாழ்வைப் பற்றிய நிராசை ஏற்பட்டவுடன் தம் குடும்பத்தாருக்கு இறுதி உபதேசம் செய்தார். ‘நான் இறந்துவிட்டால், எனக்காக நிறைய விறகுகளைச் சேகரித்து அதில் நெருப்பை மூட்டிவிடுங்கள். நெருப்பு என் இறைச்சியைத் தின்று என் எலும்பு வரை சென்று விடும் போது நான் கருகிப் போவேன். உடனே, என் கருகிய எலும்புகளை எடுத்துத் தூளாக்கி, பிறகு காற்று அதிகமாக வீசும் ஒரு நாளை எதிர்பார்த்திருந்து (அந்நாள் வந்தவுடன்) கடலில் அதை எறிந்து விடுங்கள்’ என்று அவர் கூறினார்.

(அவர் இறந்தவுடன்) அவ்வாறே மக்கள் செய்தனர். அவரின் எலும்புத் துகள்களை அல்லாஹ் ஒன்று திரட்டி, ‘நீ ஏன் அப்படிச் செய்தாய்?’ என்று அவரிடம் கேட்டான். அவர், ‘உன் அச்சத்தின் காரணத்தினால் தான் (அப்படிச் செய்தேன்)’ என்று பதிலளித்தார். எனவே, அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான்.

இதை ஹுதைஃபா(ரலி) சொல்லி முடித்தவுடன் அவர்களிடம் உக்பா இப்னு உமர்(ரலி), ‘நானும் நபி(ஸல்) அவர்கள் இதைக் கூறக் கேட்டிருக்கிறேன். அந்த மனிதர் மண்ணறை(களில் கஃபன் துணிகளைத் திருடும்) திருடனாக இருந்தார்’ என்று கூறினார்கள்.
Book :60

(புகாரி: 3452)

فَقَالَ وَسَمِعْتُهُ يَقُولُ

إِنَّ رَجُلًا حَضَرَهُ المَوْتُ، فَلَمَّا يَئِسَ مِنَ الحَيَاةِ أَوْصَى أَهْلَهُ: إِذَا أَنَا مُتُّ فَاجْمَعُوا لِي حَطَبًا كَثِيرًا، وَأَوْقِدُوا فِيهِ نَارًا، حَتَّى إِذَا أَكَلَتْ لَحْمِي وَخَلَصَتْ إِلَى عَظْمِي فَامْتُحِشَتْ، فَخُذُوهَا فَاطْحَنُوهَا، ثُمَّ انْظُرُوا يَوْمًا رَاحًا فَاذْرُوهُ فِي اليَمِّ، فَفَعَلُوا، فَجَمَعَهُ اللَّهُ فَقَالَ لَهُ: لِمَ فَعَلْتَ ذَلِكَ؟ قَالَ: مِنْ خَشْيَتِكَ، فَغَفَرَ اللَّهُ لَهُ ” قَالَ عُقْبَةُ بْنُ عَمْرٍو: وَأَنَا سَمِعْتُهُ يَقُولُ ذَاكَ: وَكَانَ نَبَّاشًا





3 . இந்தக் கருத்தில் ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-3452, 3479 , 6480 , நஸாயீ-2080 , …

மேலும் பார்க்க: புகாரி-3481 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.