தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3570

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ஷரீக் பின் அப்துல்லாஹ் பின் அபூநமிர் (ரஹ்) அறிவித்தார்:

எங்களிடம் அனஸ் இப்னு மாலிக் (ரலி), நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளிவாசலிலிருந்து (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள்:

நபி (ஸல்) அவர்களுக்கு (மீண்டும்) வஹீ (இறைச்செய்தி) வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் முதலாமவர், ‘இவர்களில் அவர் யார்?’ என்று கேட்டார். அவர்களில் நடுவிலிருந்தவர், ‘இவர்களில் சிறந்தவர்’ என்று பதிலளித்தார். அவர்களில் இறுதியானவர், ‘இவர்களில் சிறந்தவரை (விண்ணுலகப் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள்’ என்று கூறினார்.

அன்றிரவு இது மட்டும் தான் நடந்தது. அடுத்த இரவில் நபி (ஸல்) அவர்கள் தங்களின் உள்ளம் பார்க்கிற நிலையில் -(உறக்கநிலையில்)- அம்மூவரும் வந்தபோது தான் அவர்களைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் தான் உறங்கும்; அவர்களின் உள்ளம் உறங்காது. இறைத்தூதர்கள் இப்படித்தான். அவர்களின் கண்கள் உறங்கும்; அவர்களின் உள்ளங்கள் உறங்க மாட்டா. ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பொறுப்பேற்று அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வானத்தில் ஏறிச் சென்றார்கள்.

அத்தியாயம்: 61

(புகாரி: 3570)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ،

يُحَدِّثُنَا عَنْ لَيْلَةِ أُسْرِيَ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَسْجِدِ الكَعْبَةِ: جَاءَهُ ثَلاَثَةُ نَفَرٍ، قَبْلَ أَنْ يُوحَى إِلَيْهِ، وَهُوَ نَائِمٌ فِي مَسْجِدِ الحَرَامِ، فَقَالَ أَوَّلُهُمْ: أَيُّهُمْ هُوَ؟ فَقَالَ أَوْسَطُهُمْ: هُوَ خَيْرُهُمْ، وَقَالَ آخِرُهُمْ: خُذُوا خَيْرَهُمْ. فَكَانَتْ تِلْكَ، فَلَمْ يَرَهُمْ حَتَّى جَاءُوا لَيْلَةً أُخْرَى فِيمَا يَرَى قَلْبُهُ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَائِمَةٌ عَيْنَاهُ وَلاَ يَنَامُ قَلْبُهُ، وَكَذَلِكَ الأَنْبِيَاءُ تَنَامُ أَعْيُنُهُمْ وَلاَ تَنَامُ قُلُوبُهُمْ، فَتَوَلَّاهُ جِبْرِيلُ ثُمَّ عَرَجَ بِهِ إِلَى السَّمَاءِ


Bukhari-Tamil-3570.
Bukhari-TamilMisc-3570.
Bukhari-Shamila-3570.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . இஸ்மாயீல் பின் அபூஉவைஸ்

3 . அப்துல்ஹமீத் பின் அபூஉவைஸ்

4 . ஸுலைமான் பின் பிலால்

5 . ஷரீக் பின் அப்துல்லாஹ் பின் அபூநமிர் அல்லைஸீ

6 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்களை, வஹீ வருவதற்கு முன்னர் அதாவது நபியாக ஆவதற்கு முன்னர் மிஃராஜ் பயணம் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தூதராக ஆக்கப்பட்ட பின்னர் தான் மிஃராஜ் அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்று ஏராளமான ஹதீஸ்கள் கூறுகின்றன. மேலும் ஜிப்ரீல் அவர்கள் முதன் முதலில் இறைச் செய்தியைக் கொண்டு வந்த போது நபி (ஸல்) அவர்கள் பயந்தார்கள். நடுங்கினார்கள். கதீஜா (ரலி) அவர்கள் ஆறுதல் கூறி நபி (ஸல்) அவர்களின் அச்சத்தைப் போக்கினார்கள் என்ற விபரங்கள் ஆதாரப்பூர்வமான செய்திகளில் உள்ளன.

நபியாக ஆவதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்று இருந்தால் ஜிப்ரீல் அவர்களின் முதல் வருகையின் போது தமக்கு என்னவோ நேர்ந்து விட்டதாகக் கருதி அவர்கள் அஞ்சி இருக்க மாட்டார்கள். இது போல் ஏராளமான ஆதாரங்களுக்கு மாற்றமாக இது அமைந்துள்ளது.

இதை அறிவிக்கும் ஷரீக் பின் அப்துல்லாஹ் இதை தவறாக அறிவித்துள்ளார் என பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


الاسراء والمعراج (ص: 12)
( وذلك قبل أن يوحى اليه..) وقوله: “قبل أو يوحى اليه”. أنكرها الخطابي وابن حزم وعبدالحق والقاضي عياض والنووي وعبارة النووي: وقع في رواية شريك ـ يعني هذه ـ أوهام أنكرها العلماء أحدها: قوله:” قبل أن يوحى اليه” وهو غلط لم يوافق عليه. وأجمع العلماء أن فرض الصلاة كان ليلة الاسراء، فكيف يكون قبل الوحي. انتهى.

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், இதில் இடம்பெறும் “قبل أو يوحى اليه” – “நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்பு” என்ற வாசகம் தவறானது என கத்தாபீ,பிறப்பு ஹிஜ்ரி 319
இறப்பு ஹிஜ்ரி 388
வயது: 69
இப்னு ஹஸ்ம்,பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
காழீ இயாள், நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
இமாம் ஆகியோர் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்இஸ்ரா வல்மிஃராஜ்-1/12)

மேலும் ஷரீக் பின் அப்துல்லாஹ் அவர்கள், மிஃராஜ் பற்றிய செய்தியில் சுமார் 12 இடங்களில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ள இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் அவைகளில் சிலவற்றுக்கு பதிலும் கூறியுள்ளார்…

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-13/486…)

1 . ஏழு வானங்களில் எந்தெந்த வானத்தில் எந்தெந்த நபிமார்கள் இருந்தார்கள் என்ற தகவல்.

2 . மிஃராஜ் நிகழ்வு, நபியாவதற்கு முன் நடந்தது என்று கூறியது.

3 . மிஃராஜ் கனவில் நடந்தது என்று கூறியது.

4 . 7 வது வானத்தின் மேல் ஸித்ரதுல் முன்தஹா உள்ளது என்று கூறியது.

5 . இரு ஆறுகள் பற்றி

6 . இஸ்ராவின் போது நெஞ்சைப் பிளந்தது

7 . கவ்ஸர் தடாகம் முதல் வானத்தில் இருந்ததாக கூறியது.

8 . நபியை அல்லாஹ் நெருங்கினான் என்று கூறியது.

9 . …


1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஷரீக் பின் அப்துல்லாஹ் —> அனஸ் (ரலி)

பார்க்க: புகாரி-3570, 7517, முஸ்லிம்-262,


இதனுடன் தொடர்புடைய சரியான செய்திகள்:

பார்க்க: புகாரி-3887,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.