இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
பெரும் பொய்யனான முஸைலிமா, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் (யமாமாவிலிருந்து மதீனாவிற்கு) வந்தான். ‘முஹம்மது தமக்குப் பின் (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்குக் கொடுத்தால் தான் நான் அவரைப் பின்பற்றுவேன் (இல்லையென்றால் அவரை ஏற்க மாட்டேன்)’ என்று கூறத் தொடங்கினான். அவன் தன் குலத்தார் நிறையப் பேருடன் மதீனாவிற்கு வந்திருந்தான்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேச்சாளர்) ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ் (ரலி) அவர்களுடன் அவனிடம் சென்றார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கையில் பேரீச்ச மட்டையின் துண்டு ஒன்று இருந்தது. அவர்கள் முஸைலிமா தன் சகாக்களுடன் இருக்க, அவனருகே சென்று நின்று கொண்டு, ‘இந்த (பேரீச்ச மட்டையின்) துண்டைக் கூட நீ என்னிடம் கேட்டாலும் உனக்கு நான் இதைத் தரமாட்டேன். அல்லாஹ் உன் விஷயத்தில் எடுத்துள்ள முடிவை (- உன் நோக்கத்தில் நீ வெல்ல முடியாது என்பதை -) நீ மீறிச் சென்றுவிட முடியாது.
நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்துப் புறங்காட்டிச் சென்றால் அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான். உன் விஷயம் தொடர்பாக எனக்கு எவன் (கனவில்) காட்டப்பட்டானோ அவன்தான் நீ என்று கருதுகிறேன்’ என்று கூறினார்கள்.
Book :61
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حُسَيْنٍ، حَدَّثَنَا نَافِعُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
قَدِمَ مُسَيْلِمَةُ الكَذَّابُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يَقُولُ: إِنْ جَعَلَ لِي مُحَمَّدٌ الأَمْرَ مِنْ بَعْدِهِ تَبِعْتُهُ، وَقَدِمَهَا فِي بَشَرٍ كَثِيرٍ مِنْ قَوْمِهِ، فَأَقْبَلَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ ثَابِتُ بْنُ قَيْسِ بْنِ شَمَّاسٍ وَفِي يَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِطْعَةُ جَرِيدٍ، حَتَّى وَقَفَ عَلَى مُسَيْلِمَةَ فِي أَصْحَابِهِ، فَقَالَ: «لَوْ سَأَلْتَنِي هَذِهِ القِطْعَةَ مَا أَعْطَيْتُكَهَا، وَلَنْ تَعْدُوَ أَمْرَ اللَّهِ فِيكَ، وَلَئِنْ أَدْبَرْتَ ليَعْقِرَنَّكَ اللَّهُ، وَإِنِّي لَأَرَاكَ الَّذِي أُرِيتُ فِيكَ مَا رَأَيْتُ»
Bukhari-Tamil-3620.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3620.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- நாஃபிஉ பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: புகாரி-3620 , 4373 , 7461 , முஸ்லிம்-4570 ,
- உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-2373 , புகாரி-4378 , 4379 , 7033 , 7034 ,
- நாஃபிஉ பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி) —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: புகாரி-3621 , 4373 , திர்மிதீ-2292 ,
- ஹம்மாம் (ரஹ்) —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்- 8249 , புகாரி-4375 , 7037 , முஸ்லிம்-4571 ,
- நாஃபிஉ பின் ஜுபைர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: புகாரி-3620 , 4373 , 7461 ,
- அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-8460 , 8530 , இப்னு மாஜா-3922 ,
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்