தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3642

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ஷபீப் பின் ஃகர்கதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் குலத்தார் உர்வா பின் அபில்ஜஅத் அல்பாரிகீ (ரலி) அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன். உர்வா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், அவர் ஓர் ஆட்டை வாங்குவதற்காக ஒரு தீனார் (பொற்காசைக்) கொடுத்தார்கள். அதைக் கொண்டு அவர் இரண்டு ஆடுகளை வாங்கினார். அவர், அவ்விரண்டில் ஒன்றை ஒரு தீனாருக்கு விற்றுவிட்டு ஒரு தீனாரையும், ஓர் ஆட்டையும் கொண்டுவந்தார். (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் அவரது வியாபாரத்தில் அவருக்கு வளம் கிடைத்திடப் பிரார்த்தித்தார்கள். (அதன் பயனாக) அவர் மண்ணை வாங்கினாலும் அதில் இலாபமடைந்துவிடுவார் என்ற நிலையில் இருந்தார்.

அறிவிப்பாளர் ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஹஸன் பின் உமாரா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை, உர்வா பின் அபுல்ஜஅத் (ரலி) அவர்களிடமிருந்து ஷபீப் பின் ஃகர்கதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் என்று சொல்லி எம்மிடம் கொண்டுவந்தார். நான் அதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக ஷபீப் பின் ஃகர்கதா (ரஹ்) அவர்களிடம் சென்றேன்.

அவர்கள் என்னிடம், “நான் இந்த ஹதீஸை உர்வா அல்பாரிகீ (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகச்) செவியுறவில்லை. என் குலத்தார் உர்வா அவர்களிடமிருந்து அறிவிப்பதை மட்டுமே நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள். (இதற்கு அடுத்த ஹதீஸைக் காண்க: புகாரி-3643)

அத்தியாயம்: 61

(புகாரி: 3642)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا شَبِيبُ بْنُ غَرْقَدَةَ، قَالَ: سَمِعْتُ الحَيَّ يُحَدِّثُونَ، عَنْ عُرْوَةَ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَعْطَاهُ دِينَارًا يَشْتَرِي لَهُ بِهِ شَاةً، فَاشْتَرَى لَهُ بِهِ شَاتَيْنِ، فَبَاعَ إِحْدَاهُمَا بِدِينَارٍ، وَجَاءَهُ بِدِينَارٍ وَشَاةٍ، فَدَعَا لَهُ بِالْبَرَكَةِ فِي بَيْعِهِ، وَكَانَ لَوِ اشْتَرَى التُّرَابَ لَرَبِحَ فِيهِ»،

قَالَ سُفْيَانُ: كَانَ الحَسَنُ بْنُ عُمَارَةَ جَاءَنَا بِهَذَا الحَدِيثِ عَنْهُ، قَالَ: سَمِعَهُ شَبِيبٌ مِنْ عُرْوَةَ فَأَتَيْتُهُ، فَقَالَ شَبِيبٌ إِنِّي لَمْ أَسْمَعْهُ مِنْ عُرْوَةَ، قَالَ سَمِعْتُ الحَيَّ يُخْبِرُونَهُ عَنْهُ


Bukhari-Tamil-3642.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3642.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும், ஷபீப் பின் ஃகர்கதா அவர்கள் இந்தச் செய்தியை தனது குலத்தார்-ஊர்வாசிகளிடமிருந்து அறிவித்துள்ளார். இவர்கள் யார் என்பது பற்றி தெளிவு இல்லை என்பதால் தான் இமாம் ஷாஃபிஈ அவர்கள் இது சரியானதல்ல என்று கூறியுள்ளார். அல்கத்தாபீ,பிறப்பு ஹிஜ்ரி 319
    இறப்பு ஹிஜ்ரி 388
    வயது: 69
    பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    ஹைஸமீ ஆகியோர் இந்தச் செய்தியை முர்ஸல் என்றும் முன்கதிஃ-அறிவிப்பாளர்தொடரில் இடைமுறிவு ஏற்பட்ட செய்தி என்றும் கூறியுள்ளனர்.

புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இந்தச் செய்தியை பதிவு செய்திருப்பதின் காரணம் இந்தச் செய்தியுடன் சேர்ந்துவரும் மற்றொரு செய்தியான “குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரையிலும் நன்மை பிணைக்கப்பட்டுள்ளது’ என்பதை குறிப்பிடுவதுதான்.

புகாரியின் இந்தச் செய்திக்கு அடுத்ததாக இடம்பெறும் செய்திகளான புகாரி-364336443645 ஆகிய அனைத்தும் குதிரை பற்றிய செய்திகளாக இருப்பதை வைத்து இதைப் புரிந்துக் கொள்ளலாம்.

(இந்த விளக்கத்தை இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ,பிறப்பு ஹிஜ்ரி 562
இறப்பு ஹிஜ்ரி 628
வயது: 66
முன்திரீ ஆகியோர் குறிப்பிட்டிருப்பதை ஸைலஈ இமாம் தனது நஸபுர் ராயாவில் கூறியுள்ளார். நூல்: நஸபுர் ராயா-4/91-92)

புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், ஸுஃப்யான் அவர்களின் விளக்கத்தையும் சேர்த்திருப்பதை வைத்து இந்தச் செய்தி பலவீனம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாமின் நோக்கம் முன்கதிஃ, முர்ஸலான செய்திகளை ஆதாரமாக ஏற்கலாம் என்பதல்ல என்பதை இப்னுல் கத்தான் விளக்கியுள்ளார்.

3 comments on Bukhari-3642

  1. அவர் மண்ணை வாங்கினாலும் அதில் இலாபமடைந்து விடுவார் என்ற நிலையில் இருந்தார்

    இந்த வாசகம் நபி அவர்களுடைய வார்த்தையா கருத்தா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.
      இந்தச் செய்தியை தனது குலத்தார் உர்வா பின் அபுல்ஜஅத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தனர் என்று ஷபீப் பின் ஃகர்கதா கூறியுள்ளார். “அவர் மண்ணை வாங்கினாலும் அதில் இலாபமடைந்து விடுவார்” என்ற வாசகம் நபியின் சொல் அல்ல என்பதை ஹதீஸை முழுமையாக படித்தாலே தெரிந்துக் கொள்ளலாம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.