தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3803

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் (மகிழ்ச்சியால்) சிலிர்த்தது.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் ஜாபிர் (ரலி) அவர்களிடம், ‘பராஉ (ரலி), ‘ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களைச் சுமந்து சென்ற (ஜனாஸாப்) பெட்டி தான் அசைந்தது’ என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள்’ என்று சொன்னதற்கு ஜாபிர் (ரலி), ‘இந்த (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்) இரண்டு குடும்பங்களுக்கிடையே குரோதங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள், ‘ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காகக் கருணையாள(னான இறைவ)னின் சிம்மாசனம் (மகிழ்ச்சியால்) சிலிர்த்தது.’ என்று சொல்ல கேட்டிருக்கிறேன்’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 63

(புகாரி: 3803)

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا فَضْلُ بْنُ مُسَاوِرٍ، خَتَنُ أَبِي عَوَانَةَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ

«اهْتَزَّ العَرْشُ لِمَوْتِ سَعْدِ بْنِ مُعَاذٍ»،
وَعَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَهُ،
فَقَالَ رَجُلٌ: لِجَابِرٍ، فَإِنَّ البَرَاءَ يَقُولُ: اهْتَزَّ السَّرِيرُ، فَقَالَ: إِنَّهُ كَانَ بَيْنَ هَذَيْنِ الحَيَّيْنِ ضَغَائِنُ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اهْتَزَّ عَرْشُ الرَّحْمَنِ لِمَوْتِ سَعْدِ بْنِ مُعَاذٍ»


Bukhari-Tamil-3803.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3803.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  • எதிர்கேள்வி: ஸஅத் பின் முஆதை விட சிறந்த எத்தனையோ நல்லடியார்கள், நபிமார்கள் இறந்த போது அசையாத அர்ஷ் எப்படி ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்களுக்கு மட்டும் அசைந்தது?

எனினும், இந்த ஹதீஸில் இடம்பெரும் اِهْتَزَّ என்ற வார்த்தைக்கு அசைந்தது என்று பொருள் கொடுக்காமல் மகிழ்ச்சியால் ஏற்படும் ”சிலிர்ப்பு” என்று பொருள் கொடுத்தால் சரியான கருத்துதான் வரும்.


1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அஃமஷ் —> அபூஸுஃப்யான் (தல்ஹா பின் நாஃபிஃ) —> ஜாபிர் (ரலி)

பார்க்க: ஸயீத் பின் மன்ஸூர்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, புகாரி-3803 , முஸ்லிம்-4870 , இப்னு மாஜா-158 , முஸ்னத் அபீ யஃலா-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-,

  • அஃமஷ் —> அபூஸாலிஹ் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: புகாரி-3803 , இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-,


அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, முஸ்லிம்-4869 , திர்மிதீ-3848 ,

முஆத் பின் ரிஃபாஆ —> ஜாபிர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-,

முஆத் பின் ரிஃபாஆ —> மஹ்மூத் பின் அப்துர்ரஹ்மான் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-,

யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸலமா —> ஜாபிர் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,


2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-4871 .

3 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: நஸாயீ-2055 .

5 comments on Bukhari-3803

  1. اهْتَزَّ العَرْشُ (இஹ்தச அர்ஷ) இந்த வார்த்தைக்கு என்ன விளக்கம் மற்றும்
    உங்களின் இந்த கேள்விக்கு சகோதரர் பிஜே அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள். பார்க்கவும்

    https://youtu.be/oAgUlsdigzs

    https://onlinepj.in/index.php/hadees-art/%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/arsh-nadunggiyatha

  2. இந்த ஹதீஸில் இடம்பெரும் اِهْتَزَّ என்ற வார்த்தைக்கு அசைந்தது என்று பொருள் கொடுக்காமல் மகிழ்ச்சியால் ஏற்படும் ”சிலிர்ப்பு” என்று பொருள் கொடுத்தால் சரியான கருத்துதான் வரும் என்றும் மேலும் அர்ஷ் என்பது மறைவான விசயங்களில் ஈமான் கொள்வது சம்பந்தமாக வருவது அதில் எப்படி என்று கேள்வி எழுப்பக்கூடாது என்று சகோ.பிஜே தனது தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
    பார்க்க: ஒரு நபித்தோழர் மரணித்தபோது அர்ஷ் நடுங்கியதா? 07/04/19 வாட்ஸ் அப் கேள்வி பதில்

    وَمِنْ اٰيٰتِهٖۤ اَنَّكَ تَرَى الْاَرْضَ خَاشِعَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَيْهَا الْمَآءَ ”اهْتَزَّتْ” وَرَبَتْ‌ؕ اِنَّ الَّذِىْۤ اَحْيَاهَا لَمُحْىِ الْمَوْتٰى ؕ اِنَّهٗ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
    41:39. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.

  3. Jazakallahu Khair, பிஜே அவர்களின் பதிலை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ், இது சம்பந்தமாக பதிவு செய்கிறோம்.

  4. தாங்கள் தெரிவித்த தகவலை ஆய்வு செய்து பதிவு செய்துள்ளோம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.