தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3853

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) ‘அந்நஜ்கி’ என்னும் (56-வது) அத்தியாயத்தை ஓதினார்கள். (ஓதி முடித்த) பிறகு (இறுதியில் ஓதலுக்குரிய) சஜ்தா செய்தார்கள். ஒரேயொரு மனிதனைத் தவிர (நபி – ஸல் அவர்களுடன் சேர்ந்து) சஜ்தா செய்யாதவர்கள் எவரும் இருக்கவில்லை. அந்த மனிதன் (தரையில் சிரம் பணியாமல்) ஒரு கைப்பிடியளவு சிறு கூழாங்கற்களை எடுத்து (முகத்தருகே) உயர்த்தி (அப்படியே) அதன் மீது சஜ்தா செய்து, ‘இது எனக்குப் போதும்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததை கண்டேன். பின்னால், அவன் அல்லாஹ்வை நிராகரித்தவனாகக் கொல்லப்பட்டதையும் பார்த்தேன்.
Book :63

(புகாரி: 3853)

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

قَرَأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّجْمَ فَسَجَدَ، فَمَا بَقِيَ أَحَدٌ إِلَّا سَجَدَ، إِلَّا رَجُلٌ رَأَيْتُهُ أَخَذَ كَفًّا مِنْ حَصًا فَرَفَعَهُ فَسَجَدَ عَلَيْهِ، وَقَالَ: هَذَا يَكْفِينِي، فَلَقَدْ رَأَيْتُهُ بَعْدُ قُتِلَ كَافِرًا بِاللَّهِ





மேலும் பார்க்க: புகாரி-1067 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.