குர்ஆனிலுள்ள ஸஜ்தா வசனங்கள்.
பாடம்: 1
குர்ஆனில் உள்ள ஸஜ்தா வசனங்களை ஓதியதற்காக ஸஜ்தா செய்வதும், அதன் வழிமுறையும்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் (குர்ஆனின்) ‘அந்நஜ்ம்’ எனும் (53 வது) அத்தியாயத்தை (அல்குர்ஆன் 53:62) ஓதி சிரவணக்கம் (ஸஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த (முஸ்லிம்கள், இணைவைப்பாளர்கள்) அனைவரும் சிரவணக்கம் செய்தனர்; அங்கிருந்த ஒரு வயோதிகர் மட்டும் ஒரு கையளவு சிறு கற்களையோ மண்ணையோ அள்ளித் தமது நெற்றிவரை கொண்டுசென்றுவிட்டு, “இது எனக்குப் போதும்” என்று (பரிகாசத்துடன்) கூறினார். பின்னர் அவர் இறைமறுப்பாளராகவே (பத்ர் போரில்) கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.
அத்தியாயம்: 17
(புகாரி: 1067)17 – أَبْوَابُ سُجُودِ القُرْآنِ
مَا جَاءَ فِي سُجُودِ القُرْآنِ وَسُنَّتِهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ الأَسْوَدَ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:
قَرَأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّجْمَ بِمَكَّةَ فَسَجَدَ فِيهَا وَسَجَدَ مَنْ مَعَهُ غَيْرَ شَيْخٍ أَخَذَ كَفًّا مِنْ حَصًى – أَوْ تُرَابٍ – فَرَفَعَهُ إِلَى جَبْهَتِهِ، وَقَالَ: يَكْفِينِي هَذَا “، فَرَأَيْتُهُ بَعْدَ ذَلِكَ قُتِلَ كَافِرًا
Bukhari-Tamil-1067.
Bukhari-TamilMisc-1067.
Bukhari-Shamila-1067.
Bukhari-Alamiah-1005.
Bukhari-JawamiulKalim-1010.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32397-அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (அம்ர் பின் அப்துல்லாஹ் பின் உபைத்) புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியோரின் அறிவிப்பாளர் ஆவார். - இவர் பலமானவர் என இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அபூஹாதிம் அர்ராஸீ,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோர் கூறியுள்ளனர். - இவர் இறுதிக்காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்று சிலரும்; இவர் மூளைக் குழம்பவில்லை; வயதான காரணத்தால் அவருக்கு சிறிது மறதி ஏற்பட்டது. அப்போது அவரிடம் ஹதீஸைக் கேட்டவர்கள் அவரை விமர்சித்துள்ளனர் என்று சிலரும் கூறியுள்ளனர்.
- மஃன் பின் அப்துர்ரஹ்மான் மஸ்ஊதீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 121/130
அபூஜஃபர் தபரீ,பிறப்பு ஹிஜ்ரி 224
இறப்பு ஹிஜ்ரி 310
வயது: 86
அபூஜஃபர் நஹ்ஹாஸ்,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 338
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.ஆகியோர் இவர் தத்லீஸ் செய்பவர் என்று கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/284)
ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள், தனது ஆசிரியர்களிடமிருந்து தத்லீஸ் செய்யாத செய்திகளையே அறிவிக்கும் பழக்கம் கொண்டவர் ஆவார். மேலும் தனக்கு ஹதீஸை அறிவிக்கும் ஆசிரியர்களிடம் நீங்கள் உங்கள் ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டு அறிவிக்கிறீர்களா? என்று கேட்டு உறுதி செய்துக் கொள்வார்.
الجرح والتعديل لابن أبي حاتم (2/ 35):
حدثنا عبد الرحمن نا صالح [بن أحمد بن حنبل – 1] نا علي ابن المديني قال سمعت يحيى بن سعيد يقول كلما حدث به شعبة عن رجل فقد كفاك أمره فلا تحتاج أن تقول لذلك الرجل سمع ممن حدث عنه.
- (இதனால் தான்) யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள், ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் ஒருவரிடமிருந்து ஹதீஸை அறிவித்தால் அதில் அவருடைய ஆசிரியரின் தத்லீஸ் இருக்காது என்ற கருத்தில் கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/35)
ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களின் இந்த நடைமுறை பற்றி மேலும் பல நூல்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூஇஸ்ஹாக் —> அஸ்வத் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
பார்க்க: அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-1067 , 1070 , 3853 , 3972 , 4863 , முஸ்லிம்-1007 , அபூதாவூத்-1406 , நஸாயீ-959 , …
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-1401 ,
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்