பாடம்: 328
குர்ஆனில் (ஸஜ்தா எனும்) சிரம்பணியும் வசனங்கள் எத்தனை உள்ளன?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (குர்ஆனின்) 15 ஸஜ்தா வசனங்களை என்னிடம் ஓதிக்காட்ட சொன்னார்கள். அவற்றில் (காஃப் எனும் 50 வது அத்தியாயத்திலிருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம்பெறும் மூன்று வசனங்களும், சூரத்துல் ஹஜ் (எனும்) 22 வது அத்தியாயத்தில் இடம் பெறும் இரண்டு வசனங்களும் (அல்குர்ஆன்: 22:18 , 22:77) அடங்கும்.
அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
நபி (ஸல்) அவர்கள், குர்ஆனில் பதினோரு இடங்களில் சிரம்பணிதல் இருக்கிறது என்று கூறியதாக அபுத்தர்தா (ரலி) வழியாக (ஒரு செய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானதாகும்.
(அபூதாவூத்: 1401)7 – بَابُ تَفْرِيعِ أَبْوَابِ السُّجُودِ، وَكَمْ سَجْدَةً فِي الْقُرْآنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ بْنِ الْبَرْقِيِّ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا نَافِعُ بْنُ يَزِيدَ، عَنِ الْحَارِثِ بْنِ سَعِيدٍ الْعُتَقِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُنَيْنٍ، مِنْ بَنِي عَبْدِ كُلَالٍ، عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ،
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَهُ خَمْسَ عَشْرَةَ سَجْدَةً فِي الْقُرْآنِ، مِنْهَا ثَلَاثٌ فِي الْمُفَصَّلِ، وَفِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَانِ»
قَالَ أَبُو دَاوُدَ: رُوِيَ عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى عَشْرَةَ سَجْدَةً وَإِسْنَادُهُ وَاهٍ
Abu-Dawood-Tamil-1193.
Abu-Dawood-TamilMisc-1193.
Abu-Dawood-Shamila-1401.
Abu-Dawood-Alamiah-1193.
Abu-Dawood-JawamiulKalim-1195.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . முஹம்மத் பின் அப்துர்ரஹீம்
3 . இப்னு அபூமர்யம் (ஸயீத் பின் ஹகம்)
4 . நாஃபிஃ பின் யஸீத்
5 . ஹாரிஸ் பின் ஸயீத்
6 . அப்துல்லாஹ் பின் முனைன்
7 . அம்ர் பின் ஆஸ் (ரலி)
- 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10914-அல்ஹாரிஸ் பின் ஸயீத் (அல்ஹாரிஸ் பின் யஸீத் அல்உதகீ) என்பவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை. இவரின் பெயரை இப்னு யூனுஸ் அவர்கள் ஸயீத் பின் ஹாரிஸ் என்றும் கூறியுள்ளார்.
- இவரின் நிலை அறியப்படவில்லை என்று இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ பிறப்பு ஹிஜ்ரி 562
இறப்பு ஹிஜ்ரி 628
வயது: 66
கூறியுள்ளார். இவ்வாறே தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும் கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரை மக்பூல் எனும் தரத்தில் கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்இக்மால்-3/291, தஹ்தீபுத் தஹ்தீப்-1/330, தக்ரீபுத் தஹ்தீப்-1/210)
- 2 . மேலும் இதில் வரும் ராவீ-26073-அப்துல்லாஹ் பின் முனைன் என்பவரை யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
அவர்கள் மட்டுமே பலமானவர் என்று கூறியுள்ளார். தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இவரை அறியப்படாதவர் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: தீவானுள் ளுஅஃபா-2323, தஹ்தீபுத் தஹ்தீப்-2/439)
இவரைப் பற்றிய தகவல் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் தாரீகிலும், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்களின் நூலிலும் இல்லை. இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள் மட்டுமே இவரின் ஆசிரியர், மாணவரை குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு அறிவிப்பாளர் பற்றியும் குறிப்பிடும் போது தனது தந்தை அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறிய அறிவிப்பாளரின் தரம் பற்றி இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
கூறுவார். ஆனால் இவர் விசயத்தில் எதையும் குறிப்பிடவில்லை. எனவே தான் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
போன்ற சிலர் இவரை அறியப்படாதவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் அம்ர் பின் ஆஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1057, அபூதாவூத்-1401, தாரகுத்னீ-1520, ஹாகிம்-811, குப்ரா பைஹகீ-3708, 3727, ஸகீர் பைஹகீ-861, ஷுஅபுல் ஈமான்-1932, …
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
1 . 11 ஸஜ்தா வசனங்கள் பற்றிய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-568.
2 . ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தா வசனங்கள் பற்றிய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-578.
3 . குர்ஆனில் 4 இடங்களில் ஸஜ்தா வசனங்கள் உள்ளது என்பது பற்றிய சரியான செய்திகள்:
பார்க்க: புகாரி-1067, 1069, 766, முஸ்லிம்-1010,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-133,
சமீப விமர்சனங்கள்