பாடம்: 3
ஸாத் (எனும் 38ஆவது) அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்தல்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘ஸாத்’ அத்தியாயத்தில் உள்ள (38:24) வது வசனம் கட்டாயமாக (ஓதலுக்கான) ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்களில் ஒன்றல்ல. ஆயினும், நபி (ஸல்) அவர்கள் (ஸாத் அத்தியாயத்தின்) அந்த (வசனம் வரும்) இடத்தில் ஸஜ்தா செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம்: 17
(புகாரி: 1069)بَابُ سَجْدَةِ ص
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَأَبُو النُّعْمَانِ، قَالاَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ:
ص لَيْسَ مِنْ عَزَائِمِ السُّجُودِ، وَقَدْ «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِيهَا»
Bukhari-Tamil-1069.
Bukhari-TamilMisc-1069.
Bukhari-Shamila-1069.
Bukhari-Alamiah-1007.
Bukhari-JawamiulKalim-1012.
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அய்யூப் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: புகாரி-1069 , 3422 , அபூதாவூத்-1409 , திர்மிதீ-577 , …
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-1401 ,
சமீப விமர்சனங்கள்