அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (குர்ஆனின்) 15 ஸஜ்தா வசனங்களை என்னிடம் ஓதிக்காட்ட சொன்னார்கள். அவற்றில் (காஃப் எனும் 50 வது அத்தியாயத்திலிருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம்பெறும் மூன்று வசனங்களும், சூரத்துல் ஹஜ் (எனும்) 22 வது அத்தியாயத்தில் இடம் பெறும் இரண்டு வசனங்களும் (அல்குர்ஆன்: 22:18 , 22:77) அடங்கும்.
அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி)
(பைஹகீ-குப்ரா: 3727)أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو عَبْدِ اللهِ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الْجَوْهَرِيُّ ثنا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ السُّلَمِيُّ، ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أنبأ نَافِعُ بْنُ يَزِيدَ، عَنِ الْحَارِثِ بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُنَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللهُ عَنْهُ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَهُ خَمْسَ عَشْرَةَ سَجْدَةً فِي الْقُرْآنِ مِنْهَا ثَلَاثٌ فِي الْمُفَصَّلِ وَفِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَيْنِ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-3727.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-3433.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அல்ஹாரிஸ் பின் ஸயீத் (அல்ஹாரிஸ் பின் யஸீத் அல்உதகீ) என்பவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை. எனவே இவர் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-1401 .
சமீப விமர்சனங்கள்