தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-578

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 54

அல்ஹஜ் (எனும் 22 வது) அத்தியாயத்தில் ஓதலுக்கான ஸஜ்தா செய்வது குறித்து வந்துள்ளவை.

நான் (நபி ஸல் அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! ஸஜ்தாவுக்குரிய இரண்டு வசனங்கள் (அல்குர்ஆன்: 22:1877) இல் இருப்பதால் ‘அல்ஹஜ்’ அத்தியாயம் சிறப்பிக்கப்பட்டுள்ளதா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “ஆம்; யார் அவ்விரு வசனங்களை ஓதியும் ஸஜ்தா செய்யமாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களை ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் அந்தளவுக்கு பலமானதல்ல.

அல்ஹஜ் அத்தியாயத்தில் (எத்தனை வசனத்தில்) ஓதலுக்கான ஸஜ்தா செய்ய வேண்டுமென்பது தொடர்பாக அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

அல்ஹஜ் அத்தியாயத்தில் ஸஜ்தாவுக்குரிய இரு வசனங்கள் இடம் பெற்றிருப்பதன் காரணமாக அது சிறப்பிக்கப்பட்டுள்ளது” என உமர் பின் கத்தாப் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகியோரும் இவ்வாறே கூறுகின்றனர்.

அறிஞர்களில் வேறுசிலர், அந்த அத்தியாயத்தின் ஒரு வசனத்தில் (அல்குர்ஆன்: 22:18) மட்டுமே ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். இதுவே ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்), மாலிக் (ரஹ்), கூஃபாவாசிகள் ஆகியோரின் கருத்துமாகும்.

(திர்மிதி: 578)

بَابٌ فِي السَّجْدَةِ فِي الْحَجِّ

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ مِشْرَحِ بْنِ هَاعَانَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ:

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، فُضِّلَتْ سُورَةُ الحَجِّ بِأَنَّ فِيهَا سَجْدَتَيْنِ؟ قَالَ: «نَعَمْ، وَمَنْ لَمْ يَسْجُدْهُمَا فَلَا يَقْرَأْهُمَا»

«هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِذَاكَ القَوِيِّ ، وَاخْتَلَفَ أَهْلُ العِلْمِ فِي هَذَا»، فَرُوِيَ عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ، وَابْنِ عُمَرَ، أَنَّهُمَا قَالَا: «فُضِّلَتْ سُورَةُ الحَجِّ بِأَنَّ فِيهَا سَجْدَتَيْنِ»، «وَبِهِ يَقُولُ ابْنُ المُبَارَكِ، وَالشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ»، «وَرَأَى بَعْضُهُمْ فِيهَا سَجْدَةً وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ، وَمَالِكٍ، وَأَهْلِ الكُوفَةِ»


Tirmidhi-Tamil-527.
Tirmidhi-TamilMisc-527.
Tirmidhi-Shamila-578.
Tirmidhi-Alamiah-527.
Tirmidhi-JawamiulKalim-527.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . குதைபா பின் ஸயீத்

3 . அப்துல்லாஹ் பின் லஹீஆ

4 . மிஷ்ரஹ் பின் ஹாஆன்

5 . உக்பா பின் ஆமிர் (ரலி)


ஆய்வின் சுருக்கம்:

  • அப்துல்லாஹ் பின் லஹீஆ அவர்களிடம் ஆரம்பத்தில் ஹதீஸைக் கேட்ட சிலர் அறிவித்தால் அவை சரியானவையாகும். இந்தச் செய்தியை இவரிடம் இவரின் நூல் எரிவதற்கு முன் கேட்டவர்கள் அறிவித்துள்ளனர்.

(பார்க்க: இப்னு லஹீஆ)

  • ராவீ-44517-மிஷ்ரஹ் பின் ஹாஆன் பற்றி சிலர் விமர்சித்திருந்தாலும் அதற்கு சரியான ஆதாரம் இல்லை என்பதால் இவர் பலமானவர் அல்லது ஹஸன் எனும் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று கூறியுள்ள அறிஞர்களின் கருத்தின்படியே முடிவு செய்யவேண்டும்.
  • இந்தச் செய்தியின் இரண்டு பகுதியில் முதல் பகுதியை வேறு சில சான்றுகளால் ஏற்கலாம். இரண்டாவது பகுதியை உறுதிப்படுத்தும் வேறு சான்று இல்லை என்பதால் அது பலவீனமாகும்.

 

…இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-அப்துல்லாஹ் பின் லஹீஆ பலவீனமானவர். மற்றொரு அறிவிப்பாளரான மிஷ்ரஹ் பின் ஹாஆன் என்பவர், உக்பா பின் ஆமிர் (ரலி­) அவர்களிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
விமர்சித்துள்ளார்…

..


1 . இந்தக் கருத்தில் உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-17364 , 17412, அபூதாவூத்-1402 , திர்மிதீ-578 , அல்முஃஜமுல் கபீர்-846 , 847, தாரகுத்னீ-1521 , ஹாகிம்-805 , 3470, ஸுனன் குப்ரா பைஹகீ-3728 .


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

1 . 11 ஸஜ்தா வசனங்கள் பற்றிய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-568 .

2 . 15 ஸஜ்தா வசனங்கள் பற்றிய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1401 .

3 . குர்ஆனில் 4 இடங்களில் ஸஜ்தா வசனங்கள் உள்ளது என்பது பற்றிய சரியான செய்திகள்:

பார்க்க: புகாரி-1067 , 1069 , 766 , முஸ்லிம்-1010 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.