தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3855

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள், “(தக்க காரணமின்றிக் கொல்வதைத் தடை செய்து) “அல்லாஹ் கண்ணியத்திற்குரியதாக்கிய எந்த ( மனித) உயிரையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள்’ எனும் இந்த (6:151, 17:33) இரு (குர்ஆன்) வசனங்களுக்கும், “ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்துவிட்டால் அவனுக்குரிய தண்டனை நரகமாகும். மறுமை நாளில் அவனுக்கு இரு மடங்கு தண்டனை அளிக்கப்படும். என்றென்றும் இழப்புக்குரியவனாய் அவன் அதில் வீழ்ந்து கிடப்பான்’ எனும் (4:93) வசனத்திற்கும் இடையே இணக்கமான கருத்துக் காண்பது எப்படி என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நீ கேள்” என்று எனக்குக் கட்டளையிட்டார்கள்.91

நான் (சென்று) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், “திருக்குர்ஆனில், “கருணையாளனின் உண்மையான அடியார்கள் எத்தகை யவர்கள் எனில், …(தக்க காரணமின்றி கொல்லக் கூடாதென்று தடை செய்து) அல்லாஹ் கண்ணியத்திற்குரிய தாக்கியுள்ள மனித உயிரை நியாயத்துடனே தவிர கொல்லமாட்டார்கள்…’ எனும் அத்தியாயம் அல்ஃபுர்கானின் 68ஆம் வசனம் அருளப்பட்டபோது மக்காவாசி களில் இணைவைப்போராயிருந்தவர்கள், “அல்லாஹ் கண்ணியத்திற்குரியதாய் ஆக்கிய மனித உயிரை நாங்கள் கொன்றிருக்கிறோம்; அல்லாஹ்வுடன் மற்ற தெய்வத்தையும் அழைத்திருக்கிறோம்; மேலும், தீய செயல்களையும் செய்திருக்கிறோம் (நாங்கள் நரகத்தில்தான் வீழ்ந்து கிடக்க வேண்டுமா? எங்களுக்கு இஸ்லாம் எப்படிப் பயன் தரும்?)” என்று சொன்னார்கள்.

அப்போது அல்லாஹ், “பாவமன்னிப்புக் கோரி நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரிகின்றவர் தவிர! இத்தகையோரின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றிவிடுவான். மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனும் கிருபையாளனும் ஆவான்” எனும் (25:70ஆம்) வசனத்தை அருளினான். இது குற்றம் புரிந்த இறைமறுப்பாளர்களுக்கான சட்டமாகும்.

அத்தியாயம் அந்நிசாவில் (93ஆம் வசனத்தில்) கூறப்பட்டிருப்பது, இஸ்லாத்தையும் அதன் சட்ட திட்டங்களையும் அறிந்த (முஸ்லிமான) ஒரு மனிதன் விஷயத்தில் ஆகும். அவன் அறிந்த பிறகும் எவரையாவது வேண்டுமென்றே கொலை செய்துவிட்டால் அவனுக்குரிய தண்டனை நரகமாகும். அதில் அவன் நிரந்தரமாக விழுந்து கிடப்பான்” என்று பதிலளித்தார்கள்.92

அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களின் இந்தக் கருத்தை முஜாஹித் (ரஹ்) அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள், “தன் குற்றத்திற்காக வருந்தி (பாவமன்னிப்புக் கோரி)யவனைத் தவிர (மற்றவர்கள்தான் நிரந்தரமாக நரகம் புக வேண்டியிருக்கும்)” என்று பதிலளித் தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 63

(புகாரி: 3855)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، أَوْ قَالَ: حَدَّثَنِي الحَكَمُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ:

أَمَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبْزَى، قَالَ: سَلْ ابْنَ عَبَّاسٍ، عَنْ هَاتَيْنِ الآيَتَيْنِ مَا أَمْرُهُمَا {وَلاَ تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالحَقِّ} [الأنعام: 151]، {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا} [النساء: 93] فَسَأَلْتُ ابْنَ عَبَّاسٍ فَقَالَ: ” لَمَّا أُنْزِلَتِ الَّتِي فِي الفُرْقَانِ، قَالَ: مُشْرِكُو أَهْلِ مَكَّةَ: فَقَدْ قَتَلْنَا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ، وَدَعَوْنَا مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ، وَقَدْ أَتَيْنَا الفَوَاحِشَ، فَأَنْزَلَ اللَّهُ: {إِلَّا مَنْ تَابَ وَآمَنَ} [مريم: 60]. الآيَةَ، فَهَذِهِ لِأُولَئِكَ، وَأَمَّا الَّتِي فِي النِّسَاءِ: الرَّجُلُ إِذَا عَرَفَ الإِسْلاَمَ وَشَرَائِعَهُ، ثُمَّ قَتَلَ فَجَزَاؤُهُ جَهَنَّمُ “، فَذَكَرْتُهُ لِمُجَاهِدٍ فَقَالَ: «إِلَّا مَنْ نَدِمَ»


Bukhari-Tamil-3855.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3855.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-, புகாரி-3855 , 4590 , 4762 , 4763 , 4764 , 4765 , 4766 , முஸ்லிம்-, இப்னு மாஜா-, அபூதாவூத்-, திர்மிதீ-3029 , நஸாயீ-

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.