தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3939 & 3940

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3939 & 3940. அப்துர் ரஹ்மான் இப்னு முத்யிம்(ரஹ்) அறிவித்தார்.
என் கூட்டாளி ஒருவர், சில திர்ஹம்களைக் கடைவீதியில் தவணைக்கு விற்றார். நான் (வியப்படைந்து), ‘சுப்ஹானல்லாஹ்! இது சரியாகுமா? (இப்படி விற்க அனுமதியுள்ளதா?)’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ்வின் மீதாணையாக! அதை நான் கடைவீதியில் தான் விற்றேன். அதை எவரும் குறை கூறவில்லை’ என்று பதிலளித்தார். உடனே நான் பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்களிடம் கேட்டேன் அதற்கு அவர்கள், ‘நாங்கள் இந்த வியாபாரத்தை (இந்த முறையில்) செய்து வந்தபோது நபி(ஸல்) அவர்கள் (மதீனா) வந்தார்கள். ‘கையோடு கையாக – (உடனுக்குடன்) செய்யும் வியாபாரம் குற்றமில்லை. கடனுக்கு விற்பதாக இருந்தால் சரியில்லை’ என்று கூறினார்கள்’ என்று கூறிவிட்டு, ‘ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களை நீ சந்தித்துக் கேள். ஏனென்றால், அவர்தான் நம்மில் மிகப் பெரிய வியாபாரி’ என்று கூறினார்கள். அவ்வாறே ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களைச் சந்தித்து கேட்டேன். அவர்களும் பராஉ(ரலி) சொன்னதைப் போன்றே கூறினார்கள்.
(இதை சிறிய மாற்றத்துடன்) அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) ஒரு முறை (பின்வருமாறு) கூறினார்கள்.
நாங்கள் இந்த வியாபாரத்தைச் செய்து வந்தபோது நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தார்கள். ஹஜ் காலம் வரை கடனுக்கு (விற்பதாக இருந்தால் சரியில்லை) என்று கூறினார்கள் என பராஉ இப்னு ஆஸிப்(ரலி) தெரிவித்தார்கள்.
Book :63

(புகாரி: 3939 & 3940)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ أَبَا المِنْهَالِ عَبْدَ الرَّحْمَنِ بْنَ مُطْعِمٍ، قَالَ

بَاعَ شَرِيكٌ لِي دَرَاهِمَ فِي السُّوقِ نَسِيئَةً، فَقُلْتُ: سُبْحَانَ اللَّهِ أَيَصْلُحُ هَذَا؟ فَقَالَ: سُبْحَانَ اللَّهِ وَاللَّهِ لَقَدْ بِعْتُهَا فِي السُّوقِ، فَمَا عَابَهُ أَحَدٌ، فَسَأَلْتُ البَرَاءَ بْنَ عَازِبٍ، فَقَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَتَبَايَعُ هَذَا البَيْعَ، فَقَالَ: «مَا كَانَ يَدًا بِيَدٍ، فَلَيْسَ بِهِ بَأْسٌ، وَمَا كَانَ نَسِيئَةً فَلاَ يَصْلُحُ» وَالقَ زَيْدَ بْنَ أَرْقَمَ فَاسْأَلْهُ، فَإِنَّهُ كَانَ أَعْظَمَنَا تِجَارَةً، فَسَأَلْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ فَقَالَ: مِثْلَهُ وَقَالَ سُفْيَانُ مَرَّةً فَقَالَ: قَدِمَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ وَنَحْنُ نَتَبَايَعُ، وَقَالَ: نَسِيئَةً إِلَى المَوْسِمِ أَوِ الحَجِّ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.