தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3329

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்’ என்று கூறினார்கள். பிறகு,

‘1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?
2. சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு எது?
3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்?) அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?’ என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்’ என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி), ‘வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!’ என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள்,

1 . ‘இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும்.

2. சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும்.

3. குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது’ என்று பதிலளித்தார்கள்.

(உடனே) அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி), ‘தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்’ என்று கூறினார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள்.

உடனே, அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) வீட்டினுள் புகுந்(து மறைந்)தார்கள். நபி (ஸல்) அவர்கள், (யூதர்களிடம்), ‘உங்களில் அப்துல்லாஹ் பின் ஸலாம் எத்தைகைய மனிதர்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அவர் எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்’ என்று பதிலளித்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் பின் ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!’ என்று கூறினார்கள்.

உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) வெளியே வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்’ என்று கூறினார்கள். உடனே யூதர்கள், ‘இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்’ என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.

அத்தியாயம்: 60

(புகாரி: 3329)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا الفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

بَلَغَ عَبْدَ اللَّهِ بْنَ سَلاَمٍ مَقْدَمُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ فَأَتَاهُ، فَقَالَ: إِنِّي سَائِلُكَ عَنْ ثَلاَثٍ لاَ يَعْلَمُهُنَّ إِلَّا نَبِيٌّ قَالَ: مَا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ؟ وَمَا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الجَنَّةِ؟ وَمِنْ أَيِّ شَيْءٍ يَنْزِعُ الوَلَدُ إِلَى أَبِيهِ؟ وَمِنْ أَيِّ شَيْءٍ يَنْزِعُ إِلَى أَخْوَالِهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «خَبَّرَنِي بِهِنَّ آنِفًا جِبْرِيلُ» قَالَ: فَقَالَ عَبْدُ اللَّهِ ذَاكَ عَدُوُّ اليَهُودِ مِنَ المَلاَئِكَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَمَّا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ فَنَارٌ تَحْشُرُ النَّاسَ مِنَ المَشْرِقِ إِلَى المَغْرِبِ، وَأَمَّا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الجَنَّةِ فَزِيَادَةُ كَبِدِ حُوتٍ، وَأَمَّا الشَّبَهُ فِي الوَلَدِ: فَإِنَّ الرَّجُلَ إِذَا غَشِيَ المَرْأَةَ فَسَبَقَهَا مَاؤُهُ كَانَ الشَّبَهُ لَهُ، وَإِذَا سَبَقَ مَاؤُهَا كَانَ الشَّبَهُ لَهَا ” قَالَ: أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ، ثُمَّ قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ اليَهُودَ قَوْمٌ بُهُتٌ، إِنْ عَلِمُوا بِإِسْلاَمِي قَبْلَ أَنْ تَسْأَلَهُمْ بَهَتُونِي عِنْدَكَ، فَجَاءَتِ اليَهُودُ وَدَخَلَ عَبْدُ اللَّهِ البَيْتَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَيُّ رَجُلٍ فِيكُمْ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ» قَالُوا أَعْلَمُنَا، وَابْنُ أَعْلَمِنَا، وَأَخْيَرُنَا، وَابْنُ أَخْيَرِنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَفَرَأَيْتُمْ إِنْ أَسْلَمَ عَبْدُ اللَّهِ» قَالُوا: أَعَاذَهُ اللَّهُ مِنْ ذَلِكَ، فَخَرَجَ عَبْدُ اللَّهِ إِلَيْهِمْ فَقَالَ: أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَقَالُوا: شَرُّنَا، وَابْنُ شَرِّنَا، وَوَقَعُوا فِيهِ


Bukhari-Tamil-3329.
Bukhari-TamilMisc-3329.
Bukhari-Shamila-3329.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹுமைத் அத்தவீல் —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, புகாரி-3329, 3938, 3939, 4480, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-,


  • ஹுமைத் அத்தவீல் —> அனஸ் (ரலி) —> அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-158,


  • ஹம்மாத் பின் ஸலமா —> ஸாபித் —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-, முஸ்னத் பஸ்ஸார்-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-,


அப்துல்வாரிஸ்…

பார்க்க: அஹ்மத்-,


  • அப்துல்அஸீஸ் பின் ஸுஹைப் —> அனஸ் (ரலி)

பார்க்க: புகாரி-3911,



(இதில் மறுமைநாளின் முதல் அடையாளம் குறித்து மாற்றமாக வந்துள்ள செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-5558, …

இந்த இரு செய்திகளையும் இணைத்து இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் கூறியுள்ள விளக்கம்:

1 . மறுமைநாளில் முதல் அடையாளமாக தோன்றுவது யமன் நாட்டில் தோன்றும் நெருப்பாகும். இந்த நெருப்பு ஒரு பக்கம் சிறிது சிறிதாக பரவிக் கொண்டிருக்கும் அதே வேலையில் மற்ற அடையாளங்கள் வெளிப்படும். இதற்கு பின் இறுதியாக இந்த நெருப்பு அனைவரையும் ஒரு இடத்தில் ஒன்று சேர்க்கும்.

2 . அல்லது முதலில் தோன்றும் நெருப்பு என்பது குழப்பங்கள் என்றும், கடைசியில் தோன்றும் நெருப்புக்கு உண்மையான நெருப்பு என்றும் பொருள் கொள்ளலாம் (சுருக்கம்)

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-11/378)

இந்த நெருப்பு உலகம் அழிவதற்கு முன் தோன்றும் நெருப்பு ஆகும் என்று அதிகமான ஹதீஸ்துறை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே இந்த நெருப்பை கியாமத் ஏற்பட்டு மக்களை ஒன்று திரட்டும் நெருப்பு என்று எண்ணிவிடக்கூடாது.


மறுமைநாளின் முதல் அடையாளம்: நெருப்பு

பார்க்க: புகாரி-3329.


மறுமைநாளின் முதல் அடையாளம்: சூரியன் மேற்கிலிருந்து உதயமாவது.

பார்க்க: முஸ்லிம்-5637.


கடைசி அடையாளம்: நெருப்பு

பார்க்க: முஸ்லிம்-5558.)


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-2514,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.