தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5558

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

13 யுக முடிவு நாளுக்கு முந்தைய சில அடையாளங்கள்.

 அபூசரீஹா ஹுதைஃபா பின் அசீத் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நாங்கள் (நபி (ஸல்) அவர்களது அறைக்குக் கீழே) பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களை எட்டிப்பார்த்து, “எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள், “யுகமுடிவு நாளைப் பற்றி (பேசிக் கொண்டிருக்கிறோம்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (பெரிய) பத்து அடையாளங்களைக் காணாத வரை யுகமுடிவு நாள் ஏற்படவே செய்யாது” என்று கூறிவிட்டு, அந்த அடையாளங்களைப் பற்றிக் கூறினார்கள்:

1. புகை,
2. தஜ்ஜால்,
3. (பேசும்) பிராணி,
4. மேற்கிலிருந்து சூரியன் உதிப்பது,
5. மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் இறங்குதல்,
6. யஃஜூஜ், மஃஜூஜ்,
7.8.9. மூன்று நில நடுக்கங்கள். ஒன்று கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும், இன்னொன்று அரபு தீபகற்பத்திலும்,
10. இறுதியாக யமன் நாட்டிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி மக்களை விரட்டிக்கொண்டு வந்து ஓரிடத்தில் ஒன்றுகூட்டும்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 52

(முஸ்லிம்: 5558)

13 – بَابٌ فِي الْآيَاتِ الَّتِي تَكُونُ قَبْلَ السَّاعَةِ

حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ – وَاللَّفْظُ لِزُهَيْرٍ، قَالَ إِسْحَاقُ: أَخْبَرَنَا، وقَالَ الْآخَرَانِ: حَدَّثَنَا – سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ فُرَاتٍ الْقَزَّازِ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ الْغِفَارِيِّ، قَالَ

اطَّلَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا وَنَحْنُ نَتَذَاكَرُ، فَقَالَ: «مَا تَذَاكَرُونَ؟» قَالُوا: نَذْكُرُ السَّاعَةَ، قَالَ: ” إِنَّهَا لَنْ تَقُومَ حَتَّى تَرَوْنَ قَبْلَهَا عَشْرَ آيَاتٍ – فَذَكَرَ – الدُّخَانَ، وَالدَّجَّالَ، وَالدَّابَّةَ، وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، وَنُزُولَ عِيسَى ابْنِ مَرْيَمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَيَأَجُوجَ وَمَأْجُوجَ، وَثَلَاثَةَ خُسُوفٍ: خَسْفٌ بِالْمَشْرِقِ، وَخَسْفٌ بِالْمَغْرِبِ، وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ، وَآخِرُ ذَلِكَ نَارٌ تَخْرُجُ مِنَ الْيَمَنِ، تَطْرُدُ النَّاسَ إِلَى مَحْشَرِهِمْ


Muslim-Tamil-5558.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2901.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-5166.





மேற்கண்ட முஸ்லிம்-5558 இல் மறுமைநாளின் கடைசி அடையாளம் யமன் நாட்டின் நெருப்பு என்று வந்துள்ளது. இதற்கு மாற்றமாக முதல் அடையாளம் என்றும் சில செய்திகள் வந்துள்ளன:

பார்க்க: புகாரி-3329.

இந்த இரு செய்திகளையும் இணைத்து இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் கூறியுள்ள விளக்கம்:

1 . மறுமைநாளில் முதல் அடையாளமாக தோன்றுவது யமன் நாட்டில் தோன்றும் நெருப்பாகும். இந்த நெருப்பு ஒரு பக்கம் சிறிது சிறிதாக பரவிக் கொண்டிருக்கும் அதே வேலையில் மற்ற அடையாளங்கள் வெளிப்படும். இதற்கு பின் இறுதியாக இந்த நெருப்பு அனைவரையும் ஒரு இடத்தில் ஒன்று சேர்க்கும்.

2 . அல்லது முதலில் தோன்றும் நெருப்பு என்பது குழப்பங்கள் என்றும், கடைசியில் தோன்றும் நெருப்புக்கு உண்மையான நெருப்பு என்றும் பொருள் கொள்ளலாம் (சுருக்கம்)

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-11/378)

இந்த நெருப்பு உலகம் அழிவதற்கு முன் தோன்றும் நெருப்பு ஆகும் என்று அதிகமான ஹதீஸ்துறை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே இந்த நெருப்பை கியாமத் ஏற்பட்டு மக்களை ஒன்று திரட்டும் நெருப்பு என்று எண்ணிவிடக்கூடாது.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-3329,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.