இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்களிடம் யூதர்களின் ஒரு கூட்டம் வந்தது. அவர்கள், அபுல்காஸிமே! நபியைத் தவிர வேறுயாரும் அறிய முடியாத நான்கு விஷயங்களை பற்றி உம்மிடம் கேட்கப்போகிறோம் என்று கூறினார்கள். அதற்கு, நபி (ஸல்) அவர்கள் “நீங்கள் விரும்பியதை என்னிடம் கேளுங்கள்!. அதற்கு முன் யஃகூப் அலை அவர்கள் தனது பிள்ளைகளிடம் அல்லாஹ்வின் பெயரால் எடுத்த உறுதிமொழி போன்று என்னிடத்தில் அல்லாஹ்வின் பெயரால் உறுதிமொழி அளியுங்கள்: நான் நீங்கள் கேட்டவற்றிக்கு பதில் கூறிவிட்டால் என்னிடம் இஸ்லாத்தை ஏற்பதாக பைஅத் செய்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், ஆம் அப்படியே உமக்கு உறுதிமொழி அளிக்கிறோம் என்று கூறினார்கள்.
பிறகு அவர்கள், இந்த 4 விசயங்களைப் பற்றி எங்களுக்கு கூறுவீராக என்று சொன்னார்கள்.
1 . தவ்ராத் வேதம் அருளப்படுவதற்கு முன் எந்த உணவை யஃகூப் அலை அவர்கள் தன் மீது ஹராமாக்கி கொண்டார்கள்.
2 . பெண்ணுடைய நீர் எந்த தன்மையுடையது. ஆணின் நீர் எந்த தன்மையுடையது. எதனால் ஆண் குழந்தை பிறக்கிறது.
3 . தூக்கத்தில் இந்த எழுதப் படிக்கத் தெரியாத நபியின் நிலை என்ன
4 . இந்த நபிக்கு இறைச் செய்தியை கொண்டு வரும் பொறுப்பாளரான வானவர் யார்.
மீண்டும் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுடைய ஒப்பந்தத்தையும், உறுதிமொழியையும் நீங்கள் நிறைவேற்றுங்கள். நான் நீங்கள் கேட்டவற்றிக்கு பதில் கூறிவிட்டால் என்னிடம் இஸ்லாத்தை ஏற்பதாக பைஅத் செய்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், ஆம் அப்படியே உமக்கு உறுதிமொழி அளிக்கிறோம் என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், மூஸா (அலை) அவர்களின் மீது தவ்ராத்தை இறக்கி வைத்தவனான அல்லாஹ்வை முன்வைத்து உங்களிடம் நான் கேட்கிறேன். இஸ்ராயீல்-யஃகூப் (அலை) அவர்கள் ஒரு தடவை நீண்ட நாள் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்கள். எனவே அல்லாஹ் எனக்கு இந்த நோயிலிருந்து நிவாரணத்தை வழங்கினால் எனக்கு மிகவும் பிடித்தமான பானத்தை தடை செய்துக் கொள்வேன்; எனக்கு மிகவும் பிடித்தமான உணவை தடை செய்துக் கொள்வேன் என்று அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்த இறைச்சி ஒட்டகத்தின் இறைச்சியாக இருந்தது. அவர்களுக்கு மிகவும் பிடித்த பானம் ஒட்டகத்தின் பாலாக இருந்தது. (அல்லாஹ் அவர்களுக்கு நிவாரணம் வழங்கிய போது அதை தனக்கு தடுத்துக் கொண்டார்கள்). இது உங்களுக்கு தெரிந்த விசயம் தானே! என்று கூறினார்கள். உடனே அவர்கள் அல்லாஹ்வே ஆம், இது சரியான பதில் என்று கூறினர். நபி ஸல் அவர்கள் இவர்கள் இப்படி கூறியதற்கு அல்லாஹ்வே நீயே சாட்சி என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்தார்கள்.
ஒரு ஆணின் நீர் (விந்து உயிரணு) அடர்த்தியான வெள்ளை நிறத்தில் இருக்கும்; பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) அடர்த்தி குறைந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்பது நீங்கள் அறிந்த விசயமே. ஒரு ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை மிகைத்துவிட்டால் அல்லாஹ்வின் நாட்டப்படி ஆண்குழந்தை பிறக்கிறது. பெண்ணின் நீர், ஆணின் நீரை மிகைத்துவிட்டால் பெண்குழந்தை பிறக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் அல்லாஹ்வே, ஆம் இது சரியான பதில் என்று கூறினர்.
…..
இந்த நபியின் கண் தூங்கினாலும் உள்ள தூங்காதே என்பதே நாங்கள் அறிவீர்கள் தானே என்று கூறினார்கள் அவர்கள் ஆம் என்று கூறினர்.
உம்முடைய பொறுப்பாளரான மாணவர் யார் என கூறும் என்று கேட்டார்கள் அதை வைத்து நாங்கள் உன்னிடம் சேர்ந்து கொள்வோம் அல்லது உண்மையை விட்டு பிரிந்து விடுவோம் என்று கூறினார்கள்.
அதற்கு நபி அவர்கள் என்னுடைய பொறுப்பாளர் ஜிப்ரீல் எனும் வானவர் ஆவா எனக்கு முன் வந்த நபிமார்களுக்கும் அவரே பொறுப்பாளர் ஆவார் என்று கூறினார்கள் உடனே யூதர்கள் உண்மை நாங்கள் பிரிந்து செல்கிறோம் ஜிபிரியில் அல்லாத மாணவர்கள் நம்முடைய பொறுப்பாளர்கள் என்றால் நாம் உன்னை ஏற்று இருப்போம் உன்னிடம் இஸ்லாத்தை ஏற்பதாக உறுதிமொழி அளித்திருப்போம் உண்மை படுத்திருக்கும் என்று கூறினர். நபி அவர்கள் குதிரையிலே நீங்கள் ஏற்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் எங்களுடைய விரோதி என்று கூறினார்கள் அப்போதுதான் இந்த வசனம் இறங்கிய இறங்கியது அது முதல் அவர்கள் அல்லாஹ்வுடைய கோபத்துக்கு ஆளானார்கள்.
حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، حَدَّثَنَا شَهْرٌ، قَالَ ابْنُ عَبَّاسٍ:
حَضَرَتْ عِصَابَةٌ مِنَ الْيَهُودِ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَقَالُوا: يَا أَبَا الْقَاسِمِ، حَدِّثْنَا عَنْ خِلالٍ نَسْأَلُكَ عَنْهُنَّ لَا يَعْلَمُهُنَّ إِلا نَبِيٌّ، قَالَ: ” سَلُونِي عَمَّا شِئْتُمْ، وَلَكِنِ اجْعَلُوا لِي ذِمَّةَ اللَّهِ، وَمَا أَخَذَ يَعْقُوبُ عَلَيْهِ السَّلامُ، عَلَى بَنِيهِ: لَئِنْ أَنَا حَدَّثْتُكُمْ شَيْئًا فَعَرَفْتُمُوهُ، لَتُتَابِعُنِّي عَلَى الْإِسْلَامِ ” قَالُوا: فَذَلِكَ لَكَ، قَالَ: «فَسَلُونِي عَمَّا شِئْتُمْ» قَالُوا: أَخْبِرْنَا عَنْ أَرْبَعِ خِلَالٍ نَسْأَلُكَ عَنْهُنَّ: أَخْبِرْنَا أَيُّ الطَّعَامِ حَرَّمَ إِسْرَائِيلُ عَلَى نَفْسِهِ مِنْ قَبْلِ أَنْ تُنَزَّلَ التَّوْرَاةُ؟ وَأَخْبِرْنَا كَيْفَ مَاءُ الْمَرْأَةِ، وَمَاءُ الرَّجُلِ؟ كَيْفَ يَكُونُ الذَّكَرُ مِنْهُ؟ وَأَخْبِرْنَا كَيْفَ هَذَا النَّبِيُّ الْأُمِّيُّ فِي النَّوْمِ؟ وَمَنْ وَلِيُّهُ مِنَ المَلائِكَةِ؟ قَالَ: «فَعَلَيْكُمْ عَهْدُ اللَّهِ وَمِيثَاقُهُ لَئِنْ أَنَا أَخْبَرْتُكُمْ لَتُتَابِعُنِّي؟» قَالَ: فَأَعْطَوْهُ مَا شَاءَ مِنْ عَهْدٍ وَمِيثَاقٍ، قَالَ: «فَأَنْشُدُكُمْ بِالَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ تَعْلَمُونَ أَنَّ إِسْرَائِيلَ يَعْقُوبَ عَلَيْهِ السَّلامُ، مَرِضَ مَرَضًا شَدِيدًا، وَطَالَ سَقَمُهُ، فَنَذَرَ لِلَّهِ نَذْرًا لَئِنْ شَفَاهُ اللَّهُ تَعَالَى مِنْ سَقَمِهِ، لَيُحَرِّمَنَّ أَحَبَّ الشَّرَابِ إِلَيْهِ، وَأَحَبَّ الطَّعَامِ إِلَيْهِ، وَكَانَ أَحَبَّ الطَّعَامِ إِلَيْهِ لُحْمَانُ الْإِبِلِ، وَأَحَبَّ الشَّرَابِ إِلَيْهِ أَلْبَانُهَا؟» قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: «اللَّهُمَّ اشْهَدْ عَلَيْهِمْ، فَأَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلا هُوَ، الَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى، هَلْ تَعْلَمُونَ أَنَّ مَاءَ الرَّجُلِ أَبْيَضُ غَلِيظٌ، وَأَنَّ مَاءَ الْمَرْأَةِ أَصْفَرُ رَقِيقٌ، فَأَيُّهُمَا عَلا كَانَ لَهُ الْوَلَدُ وَالشَّبَهُ بِإِذْنِ اللَّهِ؟ إِنْ عَلا مَاءُ الرَّجُلِ عَلَى مَاءِ الْمَرْأَةِ كَانَ ذَكَرًا بِإِذْنِ اللَّهِ، وَإِنْ عَلا مَاءُ الْمَرْأَةِ عَلَى مَاءِ الرَّجُلِ كَانَ أُنْثَى بِإِذْنِ اللَّهِ؟» . قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: «اللَّهُمَّ اشْهَدْ عَلَيْهِمْ، فَأَنْشُدُكُمْ بِالَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى، هَلْ تَعْلَمُونَ أَنَّ هَذَا النَّبِيَّ الْأُمِّيَّ تَنَامُ عَيْنَاهُ وَلا يَنَامُ قَلْبُهُ؟» قَالُوا: اللَّهُمَّ نَعَمْ. قَالَ: «اللَّهُمَّ اشْهَدْ» قَالُوا: وَأَنْتَ الْآنَ فَحَدِّثْنَا: مَنْ وَلِيُّكَ مِنَ المَلائِكَةِ؟ فَعِنْدَهَا نُجَامِعُكَ أَوْ نُفَارِقُكَ؟ قَالَ: «فَإِنَّ وَلِيِّيَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلامُ، وَلَمْ يَبْعَثِ اللَّهُ نَبِيًّا قَطُّ إِلا وَهُوَ وَلِيُّهُ» قَالُوا: فَعِنْدَهَا نُفَارِقُكَ، لَوْ كَانَ وَلِيُّكَ سِوَاهُ مِنَ المَلائِكَةِ لَتَابَعْنَاكَ وَصَدَّقْنَاكَ، قَالَ: «فَمَا يَمْنَعُكُمْ مِنْ أَنْ تُصَدِّقُوهُ؟» قَالُوا: إِنَّهُ عَدُوُّنَا، قَالَ: فَعِنْدَ ذَلِكَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ {قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِجِبْرِيلَ فَإِنَّهُ نَزَّلَهُ عَلَى قَلْبِكَ بِإِذْنِ اللَّهِ} [البقرة: 97] إِلَى قَوْلِهِ عَزَّ وَجَلَّ {كِتَابَ اللَّهِ وَرَاءَ ظُهُورِهِمْ كَأَنَّهُمْ لَا يَعْلَمُونَ} [البقرة: 101] فَعِنْدَ ذَلِكَ: بَاءُوا بِغَضَبٍ عَلَى غَضَبٍ الْآيَةَ،
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-2514.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்