தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4090

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ரிஃல், தக்வான், உஸய்யா மற்றும் பனூ லிஹ்யான் குலத்தினர் (வந்து தங்களின்) பகைவர்களுக்கு எதிராக (படை தந்து) உதவும் படி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கோரினர். அப்போது அவர்களுக்கு அன்சாரிகளில் எழுபது பேர்களை அனுப்பித் தந்து நபி(ஸல்) அவர்கள் உதவினார்கள். அந்தக் காலத்தில் அவர்களை (அந்த எழுபது பேர்களை) நாங்கள் ‘குர்ராஃ – திருக்குர்ஆனை நன்கறிந்தவர்கள்’ என்று பெயரிட்டு அழைத்து வந்தோம். அவர்கள் பகலில் (பிழைப்பிற்காக) விறகு கேசகரிப்பவர்களாகவும் இரவில் தொழககூடியவர்களாகவும் இருந்து வந்தனர். இவர்கள் (பயணம் செய்து) ‘பிஃரு மஊனா’ என்னுமிடத்தை அடைந்தபோது (பனூ சுலைம் குலத்தைச் சேர்ந்த) அவர்கள், இவர்களை வஞ்சித்துக கொன்றுவிட்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களை எட்டியபோது ஒரு மாத காலம் சுப்ஹுத் தொழுகையில் அரபுக் குலங்களான ரிஃல், தக்வான், உஸய்யா மற்றும் பனூ லிஹ்யான் குலத்தினருக்கெதிராக பிரார்தயீதத்து ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதினார்கள். இவர்கள் குறித்து (அருளப்பட்டிருந்த) குர்ஆன் (வசனமொன்றை) ஓதி வந்தோம். பின்னாளில் அது (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. ‘நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்துவிட்டான்; எங்களை அவன் திருப்தியுறச் செய்தான்’ என்று எங்களைப் பற்றி எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்’ என்பதே அந்த வசனமாகும்.
அனஸ்(ருலி) அவர்களிடமிருந்து கத்தாதா(ரஹ்) கூறினார்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் வரையில் சுப்ஹுத் தொழுகையில் அரபுக் குலங்களைச் சேர்ந்த ரிஃல், தக்வான், உஸய்யா, மற்றும் பனூ லிஹ்யான் கூட்டத்தினருக்கு எதிராக ‘குனூத்’ பிரார்த்தனை புரிந்தார்கள்.
அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து இதே கருத்தில் அறிவிக்கப்படும் இன்னோர் அறிவிப்பில், ‘அன்சாரிகளான அந்த எழுபது பேரும் பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டார்கள்’ என்று காணப்படுகிறது.
Book :64

(புகாரி: 4090)

حَدَّثَنِي عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ رِعْلًا، وَذَكْوَانَ، وَعُصَيَّةَ، وَبَنِي لَحْيَانَ، اسْتَمَدُّوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَدُوٍّ، فَأَمَدَّهُمْ بِسَبْعِينَ مِنَ الأَنْصَارِ، كُنَّا نُسَمِّيهِمْ القُرَّاءَ فِي زَمَانِهِمْ، كَانُوا يَحْتَطِبُونَ بِالنَّهَارِ، وَيُصَلُّونَ بِاللَّيْلِ، حَتَّى كَانُوا بِبِئْرِ مَعُونَةَ قَتَلُوهُمْ وَغَدَرُوا بِهِمْ، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَقَنَتَ شَهْرًا يَدْعُو فِي الصُّبْحِ عَلَى أَحْيَاءٍ مِنْ أَحْيَاءِ العَرَبِ، عَلَى رِعْلٍ، وَذَكْوَانَ، وَعُصَيَّةَ، وَبَنِي لَحْيَانَ» قَالَ أَنَسٌ: ” فَقَرَأْنَا فِيهِمْ قُرْآنًا، ثُمَّ إِنَّ ذَلِكَ رُفِعَ: بَلِّغُوا عَنَّا قَوْمَنَا أَنَّا لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَأَرْضَانَا





மேலும் பார்க்க: புகாரி-1001 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.