ஆஸிம் அல் அஹ்வல்(ரஹ்) அறிவித்தார்.
நான், அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் தொழுகையில் குனூத் (என்னும் சிறப்பு துஆ நபிகளார் காலத்தில் இருந்ததா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். உடனே நான், ‘ருகூவிற்கு முன்பா? அல்லது பின்பா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ருகூஉவிற்கு முன்புதான்’ என்று பதிலளித்தார்கள். உடனே நான், ‘தாங்கள் ருகூவிற்குப் பின்னால் தான் என்று சொன்னதாக இன்னார் எனக்குத் தெரிவித்தாரே’ என்று கேட்டேன். அதற்கு ‘அவர் தவறாகக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு(ம் கூட) ஒரு மாத காலம் தான் குனூத் ஓதினார்கள். (அது எப்போது நடந்ததென்றால்) நபி(ஸல்) அவர்கள் ‘குர்ரா திருக்குர்ஆனை நன்கறிந்தவர்கள்’ என்று கூறப்பட்டு வந்த சிலரை – அவர்கள் எழுபது பேர் ஆவர் – இணைவைப்பவர்கள் சிலரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்களின் தரப்பிலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே (பரஸ்பரப் பாதுகாப்பு) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (இவ்வாறு) அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த இவர்களின் கையோங்கி (அந்த 70 பேர்களையும் கொன்று)விட்டனர். எனவேதான், அவர்களுக்கெதிராக ஒரு மாத காலம் ருகூவிற்குப் பின்பு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘குனூத் ஓதினார்கள்’ என்று அனஸ்(ரலி) பதிலளித்தார்கள்.
Book :64
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، قَالَ
سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ القُنُوتِ فِي الصَّلاَةِ؟ فَقَالَ: نَعَمْ، فَقُلْتُ: كَانَ قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَهُ؟ قَالَ: قَبْلَهُ، قُلْتُ: فَإِنَّ فُلاَنًا أَخْبَرَنِي عَنْكَ أَنَّكَ قُلْتَ بَعْدَهُ، قَالَ: كَذَبَ «إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الرُّكُوعِ شَهْرًا أَنَّهُ كَانَ بَعَثَ نَاسًا يُقَالُ لَهُمْ القُرَّاءُ، وَهُمْ سَبْعُونَ رَجُلًا إِلَى نَاسٍ مِنَ المُشْرِكِينَ، وَبَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهْدٌ قِبَلَهُمْ، فَظَهَرَ هَؤُلاَءِ الَّذِينَ كَانَ بَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهْدٌ، فَقَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الرُّكُوعِ شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ»
சமீப விமர்சனங்கள்