தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4249

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 42

கைபரில் நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் தோய்த்துக் கொடுக்கப்பட்ட ஆடு.

இது குறித்து ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளர்கள்.


 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆடு ஒன்று அன்பளிப்பாக தரப்பட்டது.

அத்தியாயம்: 64

(புகாரி: 4249)

بَابُ الشَّاةِ الَّتِي سُمَّتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخَيْبَرَ

رَوَاهُ عُرْوَةُ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي سَعِيدٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

«لَمَّا فُتِحَتْ خَيْبَرُ أُهْدِيَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ فِيهَا سُمٌّ»


Bukhari-Tamil-4249.
Bukhari-TamilMisc-4249.
Bukhari-Shamila-4249.
Bukhari-Alamiah-3918.
Bukhari-JawamiulKalim-3943.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . முஹம்மது பின் இஸ்மாயீல்-புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . அப்துல்லாஹ் பின் யூஸுஃப்-அபூமுஹம்மது

3 . லைஸ் பின் ஸஃத்-அபூஹாரிஸ்

4 . ஸயீத் பின் கைஸான்-ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ

5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


மேலும் பார்க்க: புகாரி-3169.

2 comments on Bukhari-4249

  1. விஷம்கலந்த சம்பவத்தை உறுதிபடுத்தும் ராவிகள்:
    1.أبو سلمة
    2.أبو هريرة
    3.جابر بن عبدالله
    4.عبدالله بن مسعود
    5.أبو لبيبة الأشهلي جد يحيى بن عبدالرحمن
    6.وعبدالله بن عباس
    7.سعيد بن المسيب
    8.عروة بن الزبير
    9.كعب بن مالك
    10.محمد بن مسلم بن شهاب الزهري
    11.عمار بن ياسر
    12.أم مبشر الأنصارية
    13.عبدالله بن عمر
    14.أبو سعيد الخدري
    15.موسى بن عقبة

    நீங்கள் பிஜே அவர்களுக்கு ஆதரவாக இருப்பதால் இதை எல்லாம் ஆய்வு செய்ய மாட்டீர்கள்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      நீங்கள் இவ்வாறு நபித்தோழர்கள், தாபிஈன்களின் பெயர்களை மட்டும் கூறுவதற்கு பதிலாக இந்தச் செய்திகளை ஒன்று சேர்த்து எது சரியான அறிவிப்பாளர்தொடர் எது பலவீனமான அறிவிப்பாளர்தொடர் என்று பதிவு செய்து word doc இல் அனுப்பினால் பயனுள்ளதாக இருக்கும்.

      நாம் ஆய்வு செய்ய வேண்டிய ஹதீஸ்கள் ஏராளம் உள்ளன. நமது பயான் சைட்டிலும், ஹதீஸ் சைட்டிலும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன.

      “நீங்கள் பிஜே அவர்களுக்கு ஆதரவாக இருப்பதால் இதை எல்லாம் ஆய்வு செய்ய மாட்டீர்கள்” என்று கூறியுள்ள கருத்து தவறாகும். எந்த மனிதரின் ஆய்வாக இருந்தாலும் அதில் சரியானதும் இருக்கும். தவறானதும் இருக்கும் என்பதே நமது நிலைப்பாடு. நாம் ஆதாரங்களுக்கு தான் முக்கியத்துவம் தருவோம். குறிப்பிட்ட மனிதர்களுக்கு அல்ல என்பதை தெரிந்துக் கொள்ளவும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.