தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3169

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 7

இணைவைப்பவர்கள் முஸ்லிம்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தால் அவர்கள் மன்னிக்கப்படுவார்களா?

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) நபி (ஸல்) அவர்கள், ‘இங்கேயுள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று கூறினார்கள்.

அவ்வாறே, அவர்கள் ஒன்று திரட்டி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள். (அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப் போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மையைச் சொல்வீர்களா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த யூதர்கள், ‘சரி (உண்மையைச் சொல்கிறோம்)’ என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘உங்கள் தந்தை யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘இன்னார்’ என்று பதிலளித்தார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள், ‘பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார் தான்’ என்று கூறினார்கள். அவர்கள், ‘நீங்கள் சொன்னது உண்மை தான்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘நான் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மையைச் சொல்வீர்களா?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘சரி சொல்கிறோம், அபுல்காசிமே! இனி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் தந்தை விஷயத்தில் நாங்கள் பொய் சொன்னதை நீங்கள் அறிந்ததைப் போன்றே அதையும் அறிந்து கொள்வீர்கள்’ என்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘நரகவாசிகள் யார்?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘நாங்கள் அதில் சில காலம் மட்டுமே இருப்போம். பிறகு, எங்களுக்கு பதிலாக அதில் நீங்கள் புகுவீர்கள்’ என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அதில் நீங்கள் இழிவுபட்டுப் போவீர்களாக! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அதில் உங்களுக்கு பதிலாக ஒருபோதும் புக மாட்டோம்’ என்று கூறினார்கள். பிறகு, ‘நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மையைச் சொல்வீர்களா?’ என்று கேட்டார்கள்.

அவர்கள், ‘சரி, அபுல் காசிமே!’ என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘ஆம் (கலந்திருக்கிறோம்)’ என்று பதில் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘நீங்கள் பொய்யராக இருந்(து விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்கு செய்யாது’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 58

(புகாரி: 3169)

بَابُ إِذَا غَدَرَ المُشْرِكُونَ بِالْمُسْلِمِينَ، هَلْ يُعْفَى عَنْهُمْ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ المَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

لَمَّا فُتِحَتْ خَيْبَرُ أُهْدِيَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ فِيهَا سُمٌّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْمَعُوا إِلَيَّ مَنْ كَانَ هَا هُنَا مِنْ يَهُودَ» فَجُمِعُوا لَهُ، فَقَالَ: «إِنِّي سَائِلُكُمْ عَنْ شَيْءٍ، فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْهُ؟»، فَقَالُوا: نَعَمْ، قَالَ لَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَبُوكُمْ؟»، قَالُوا: فُلاَنٌ، فَقَالَ: «كَذَبْتُمْ، بَلْ أَبُوكُمْ فُلاَنٌ»، قَالُوا: صَدَقْتَ، قَالَ: «فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَيْءٍ إِنْ سَأَلْتُ عَنْهُ؟»، فَقَالُوا: نَعَمْ يَا أَبَا القَاسِمِ، وَإِنْ كَذَبْنَا عَرَفْتَ كَذِبَنَا كَمَا عَرَفْتَهُ فِي أَبِينَا، فَقَالَ لَهُمْ: «مَنْ أَهْلُ النَّارِ؟»، قَالُوا: نَكُونُ فِيهَا يَسِيرًا، ثُمَّ تَخْلُفُونَا فِيهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْسَئُوا فِيهَا، وَاللَّهِ لاَ نَخْلُفُكُمْ فِيهَا أَبَدًا»، ثُمَّ قَالَ: «هَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَيْءٍ إِنْ سَأَلْتُكُمْ عَنْهُ؟»، فَقَالُوا: نَعَمْ يَا أَبَا القَاسِمِ، قَالَ: «هَلْ جَعَلْتُمْ فِي هَذِهِ الشَّاةِ سُمًّا؟»، قَالُوا: نَعَمْ، قَالَ: «مَا حَمَلَكُمْ عَلَى ذَلِكَ؟»، قَالُوا: أَرَدْنَا إِنْ كُنْتَ كَاذِبًا نَسْتَرِيحُ، وَإِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ


Bukhari-Tamil-3169.
Bukhari-TamilMisc-3169.
Bukhari-Shamila-3169.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் கருத்தை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . அப்துல்லாஹ் பின் யூஸுஃப்

3 . லைஸ் பின் ஸஃத்

4 . ஸயீத் பின் கைஸான்-ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ

5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


 

 


ஆய்வுக்காக:

1 . நபிகள் நாயகத்திற்கு விஷம் கொடுக்கப்பட்ட ஹதீஸின் விளக்கம் என்ன?.

2 . هل مات الرسول مسموما؟.


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • லைஸ் பின் ஸஃத் —> ஸயீத் பின் கைஸான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: …முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-23520, அஹ்மத்-9827, தாரிமீ-70, புகாரி-3169, 4249, 5777, குப்ரா நஸாயீ-11291, ….


  • ஸுஃப்யான் பின் ஹுஸைன் —> ஸுஹ்ரீ —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: தபகாத்துல் குப்ரா-, அபூதாவூத்-4509, குப்ரா பைஹகீ-16007,


  • ஸுஃப்யான் பின் ஹுஸைன் —> ஸுஹ்ரீ —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: தபகாத்துல் குப்ரா-, அபூதாவூத்-4509, குப்ரா பைஹகீ-16007,


  • முஹம்மத் பின் அம்ர் —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-8007, அல்முஃஜமுல் கபீர்-1202, ஹாகிம்-4967, குப்ரா பைஹகீ-16010, 16011,


  • அபூஸலமா (ரஹ்) —> நபி (ஸல்)

பார்க்க: தாரிமீ-, அபூதாவூத்-4511, 4512, குப்ரா பைஹகீ-,


 


2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-4428.


3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-2617.


4 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-2784.


5 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4510.


6 . உம்மு முபஷ்ஷிர் (ரலி), 7 . கஅப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
(ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4513.


8 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3546.


9 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-7090.


10 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-3733.


11 . அபூலபீபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-493.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.