பாடம் : 84
நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்.75
அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்து விடக் கூடியவரே. இவர்களும் இறந்து விடக் கூடியவர்கள்தாம். பிறகு திண்ணமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்து வைத்துத்) தர்க்கித்துக் கொள்வீர்கள். (39:30,31)
ஆயிஷா (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, ‘ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது’ என்று கூறினார்கள்.
Book : 64
بَابُ مَرَضِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوَفَاتِهِ
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ. ثُمَّ إِنَّكُمْ يَوْمَ القِيَامَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُونَ} [الزمر: 31]
وَقَالَ يُونُسُ عَنِ الزُّهْرِيِّ، قَالَ عُرْوَةُ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ: «يَا عَائِشَةُ مَا أَزَالُ أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُ بِخَيْبَرَ، فَهَذَا أَوَانُ وَجَدْتُ انْقِطَاعَ أَبْهَرِي مِنْ ذَلِكَ السُّمِّ»
Bukhari-Tamil-4428.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4428.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
- இந்த செய்தியை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், யூனுஸ் கூறினார் என்றே அறிவித்துள்ளார் என்பதால் இது (தஃலீக்) அறிவிப்பாளர்தொடர் முழுமை பெறாத செய்தியாகும். மேலும் இந்த செய்தியை சரியானது என ஏற்றுக்கொள்வது குர்ஆன் வசனத்திற்கு எதிரானது ஆகும்.
தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான். (அல்குர்ஆன் 5:67)
சமீப விமர்சனங்கள்