பாடம் : 48 அறியாமைக் காலத்தில் வாழ்ந்த இணை வைப்பாளர்களின் சமாதிகள் தோண்டப் படலாமா?அவ்விடத்தில் பள்ளி வாசல் கட்டலாமா? (என்றால் கட்டலாம்.)
ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் (மரணப்படுக்கையில் இருந்த போது), அல்லாஹ் யூதர்களைத் தம் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும். அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று கூறினார்கள்.
சவக்குழி (கப்று)களின் (அருகில் அல்லது அவற்றை நோக்கி அல்லது அவற்றின்)மீது தொழுவது தகாத செயலாகும். ஒரு சவக்குழிக்கு அருகில் தொழுது கொண்டிருந்த அனஸ் பின் மாலிக் (ரலி)அவர்களைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் சவக்குழி(களைத் தவிருங்கள்! அதன் அருகில் தொழாதீர்கள்) சவக் குழி(களைத் தவிருங்கள்; அதன் அருகில் தொழாதீர்கள்) என்று கூறினார்கள். ஆனால், (அங்கு தொழுத தொழுகையை) திருப்பித் தொழுமாறு அனஸ் (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்கள் பணிக்கவில்லை.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
உம்மு ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(வும்) தாங்கள் அபீ ஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) ‘அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வண்ணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்’ என்று கூறினார்கள்.
Book : 8
بَابٌ: هَلْ تُنْبَشُ قُبُورُ مُشْرِكِي الجَاهِلِيَّةِ، وَيُتَّخَذُ مَكَانُهَا مَسَاجِدَ
لِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَنَ اللَّهُ اليَهُودَ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ»
وَمَا يُكْرَهُ مِنَ الصَّلاَةِ فِي القُبُورِ وَرَأَى عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَسَ بْنَ مَالِكٍ يُصَلِّي عِنْدَ قَبْرٍ، فَقَالَ: «القَبْرَ القَبْرَ، وَلَمْ يَأْمُرْهُ بِالإِعَادَةِ»
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ
أَنَّ أُمَّ حَبِيبَةَ، وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، فَأُولَئِكَ شِرَارُ الخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ»
Bukhari-Tamil-427.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-427.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7548 , 11815 , முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹ்-768 , 769 , அஹ்மத்-24252 , புகாரி-427 , 434 , 1341 , 3873 , முஸ்லிம்-918 , 919 , 920 , நஸாயீ-704 , குப்ரா நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு குஸைமா-, இப்னு ஹிப்பான்-, குப்ரா பைஹகீ-,
சமீப விமர்சனங்கள்