பாடம் : 72 அல்அஸ்வத் அல்அன்ஸீயின் நிகழ்ச்சி16
உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா(ரஹ்) அறிவித்தார்
மகா பொய்யன் முஸைலிமா மதீனாவிற்கு வந்திருக்கிறான் என்ற செய்தி எங்களுக்கு எட்டியது. அவன் ஹாரிஸின் மகள் (கய்யிஸா என்பாள்) வீட்டில் தங்கினான். அந்த ஹாரிஸ் இப்னு குரைஸின் மகள் அவனுக்கு மனைவியாக இருந்தாள். அவள், அப்துல்லாஹ் இப்னு ஆமிருடைய (மக்களின்) தாய் ஆவாள். ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ்(ரலி) அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முஸைலிமாவிடம் சென்றார்கள். இந்த ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ் அவர்கள் தாம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (அதிகாரபூர்வ) பேச்சாளர்’ என்று அழைக்கப்பட்டு வந்தவராவார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையில் (பேரீச்ச மட்டைக்) குச்சியொன்று இருந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முஸைலிமாவின் அருகே நின்று அவனிடம் (சிறிது) பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் முஸைலிமா, ‘நீங்கள் விரும்பினால் உங்களுக்கும் (உங்கள் நபித்துவ) பதவிக்கும் இடையே குறுக்கிடாமல் நாம் விலகிக்கொள்வோம். (ஆனால்,) உங்களுக்குப் பின் நீங்கள் அந்தப் பதவியை எமக்கு அளித்திட வேண்டும்’ என்று சொன்னான். நபி(ஸல்) அவர்கள், ‘நீ என்னிடம் இந்தக் குச்சியைக் கேட்டாலும் கூட நான் இதை உனக்குக் கொடுக்கமாட்டேன். எனக்கு (கனவில்) காட்டப்பட்ட அதே ஆள் தான் நீ என்று உன்னை கருதுகிறேன். இதோ, இந்த ஸாபித் இப்னு கைஸ் உனக்கு என் சார்பாக பதிலளிப்பார்’ என்று கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.
Book : 64
بَابُ قِصَّةِ الأَسْوَدِ العَنْسِيِّ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الجَرْمِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ عُبَيْدَةَ بْنِ نَشِيطٍ، وَكَانَ فِي مَوْضِعٍ آخَرَ اسْمُهُ عَبْدُ اللَّهِ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، قَالَ
بَلَغَنَا أَنَّ مُسَيْلِمَةَ الكَذَّابَ قَدِمَ المَدِينَةَ فَنَزَلَ فِي دَارِ بِنْتِ الحَارِثِ، وَكَانَ تَحْتَهُ بِنْتُ الحَارِثِ بْنِ كُرَيْزٍ، وَهِيَ أُمُّ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ، فَأَتَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ ثَابِتُ بْنُ قَيْسِ بْنِ شَمَّاسٍ، وَهُوَ الَّذِي يُقَالُ لَهُ: خَطِيبُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَفِي يَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضِيبٌ، فَوَقَفَ عَلَيْهِ فَكَلَّمَهُ، فَقَالَ لَهُ مُسَيْلِمَةُ: إِنْ شِئْتَ خَلَّيْتَ بَيْنَنَا وَبَيْنَ الأَمْرِ، ثُمَّ جَعَلْتَهُ لَنَا بَعْدَكَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ سَأَلْتَنِي هَذَا القَضِيبَ مَا أَعْطَيْتُكَهُ، وَإِنِّي لَأَرَاكَ الَّذِي أُرِيتُ فِيهِ مَا أُرِيتُ، وَهَذَا ثَابِتُ بْنُ قَيْسٍ، وَسَيُجِيبُكَ عَنِّي». فَانْصَرَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Bukhari-Tamil-4378.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4378.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்