தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-439

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம்: 57

பெண்கள் பள்ளிவாசலில் (தங்கி) உறங்குவது. 

 439. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் அரபுக் கோத்திரத்திற்கு அடிமையாக இருந்து, பின்னர் அவர்களால் விடுதலை செய்யப்பட்டு, அவர்களுடன் வசித்து வந்த கறுப்பு அடிமைப் பெண் தன் கடந்த கால நிகழ்ச்சியைப் பின் வருமாறு என்னிடம் தெரிவித்தார்.

‘நான் அவர்களுடனிருக்கும்போது அவர்களைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி சிவப்புத் தோலில் முத்துப் பதிக்கப் பட்ட ஓர் ஆபரணத்துடன் வந்தாள். அதை அவள் கழற்றி வைத்தாள். அல்லது அது தானாகக் கீழே விழுந்துவிட்டது. அப்போது அவளருகே வந்த சிறு பருந்து ஒன்று, கீழே போடப்பட்ட அந்த ஆபரணத்தை மாமிசம் என எண்ணித் தூக்கிச் சென்றது. அவர்கள் தேடிப் பார்த்தபோது கிடைக்கவில்லை. அவர்கள் என்னைச் சந்தேகிக்கலானார்கள். என் பிறவி உறுப்பு உட்படப் பல இடங்களிலும் அவர்கள் தேடிப் பார்த்தார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அவர்களுடன் நின்றிருந்தபோது அந்தச் சிறிய பருந்து (திரும்பவும்) வந்து அதைக் கீழே போட்டதும் அவர்களுக்கருகில் அது விழுந்தது. எதைப் பற்றி என்னைச் சந்தேகித்தீர்களோ அதுதான் இது. நான் அதைத் திருடுவதைவிட்டுப் பரிசுத்தமானவள் என்று கூறினேன். இதன் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை தழுவினேன்.

அந்தப் பெண்ணுக்குப் பள்ளிவாசலில் கூடாரம் ஒன்று இருந்தது. அதிலிருந்து என்னிடம் வந்து அப்பெண் பேசிக் கொண்டிருப்பாள். என்னைச் சந்திக்கும் போதெல்லாம் பின்வரும் பாடலை அவள் பாடாமலிருந்ததில்லை.

“அந்த ஆபரணம் சம்பந்தப்பட்ட அந்த நாள் நம்முடைய இறைவனின் அற்புதங்களில் ஒன்றாகும். தெரிந்து கொள்ளுங்கள்! அவன்தான், இறைமறுப்பாளர்களின் ஊரிலிருந்து நிச்சயமாக என்னைக் காப்பாற்றினான்”.(இது கவிதையின் பொருள்).

இந்தக் கவிதையை அடிக்கடி என்னிடம் கூறுகிறாயே என்ன விஷயம் என்று நான் அப்பெண்ணிடம் கேட்டபோது மேற்கண்ட நிகழ்ச்சியை அவள் என்னிடம் கூறினாள்.

அத்தியாயம்: 8


بَابُ نَوْمِ المَرْأَةِ فِي المَسْجِدِ

حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ

أَنَّ وَلِيدَةً كَانَتْ سَوْدَاءَ لِحَيٍّ مِنَ العَرَبِ، فَأَعْتَقُوهَا، فَكَانَتْ مَعَهُمْ، قَالَتْ: فَخَرَجَتْ صَبِيَّةٌ لَهُمْ عَلَيْهَا وِشَاحٌ أَحْمَرُ مِنْ سُيُورٍ، قَالَتْ: فَوَضَعَتْهُ – أَوْ وَقَعَ مِنْهَا – فَمَرَّتْ بِهِ حُدَيَّاةٌ وَهُوَ مُلْقًى، فَحَسِبَتْهُ لَحْمًا فَخَطِفَتْهُ، قَالَتْ: فَالْتَمَسُوهُ، فَلَمْ يَجِدُوهُ، قَالَتْ: فَاتَّهَمُونِي بِهِ، قَالَتْ: فَطَفِقُوا يُفَتِّشُونَ حَتَّى فَتَّشُوا قُبُلَهَا، قَالَتْ: وَاللَّهِ إِنِّي لَقَائِمَةٌ مَعَهُمْ، إِذْ مَرَّتِ الحُدَيَّاةُ فَأَلْقَتْهُ، قَالَتْ: فَوَقَعَ بَيْنَهُمْ، قَالَتْ: فَقُلْتُ هَذَا الَّذِي اتَّهَمْتُمُونِي بِهِ، زَعَمْتُمْ وَأَنَا مِنْهُ بَرِيئَةٌ، وَهُوَ ذَا هُوَ،

قَالَتْ: «فَجَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَتْ»، قَالَتْ عَائِشَةُ: «فَكَانَ لَهَا خِبَاءٌ فِي المَسْجِدِ – أَوْ حِفْشٌ -» قَالَتْ: فَكَانَتْ تَأْتِينِي فَتَحَدَّثُ عِنْدِي، قَالَتْ: فَلاَ تَجْلِسُ عِنْدِي مَجْلِسًا، إِلَّا قَالَتْ: وَيَوْمَ الوِشَاحِ مِنْ أَعَاجِيبِ رَبِّنَا … أَلاَ إِنَّهُ مِنْ بَلْدَةِ الكُفْرِ أَنْجَانِي
قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ لَهَا مَا شَأْنُكِ، لاَ تَقْعُدِينَ مَعِي مَقْعَدًا إِلَّا قُلْتِ هَذَا؟ قَالَتْ: فَحَدَّثَتْنِي بِهَذَا الحَدِيثِ


Bukhari-Tamil-439.
Bukhari-TamilMisc-439.
Bukhari-Shamila-439.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.



 

 


இந்தச் செய்தியை ஹிஷாம் பின் உர்வா அவர்களிடமிருந்து ஹம்மாத் பின் உஸாமா-அபூஉஸாமா, அலீ பின் முஸ்ஹிர், இஸ்மாயீல் பின் அபான், அபூமுஆவியா-முஹம்மத் பின் காஸிம் ஆகிய 4 பேர் அறிவித்துள்ளனர். இவற்றில் அபூமுஆவியா அவர்கள் அறிவிக்கும் செய்திகளில் “இந்தப் பெண் அல்லாஹ்விடம் துஆச் செய்தேன்” என்று கூறியதாக கூடுதல் வார்த்தை இடம்பெற்றுள்ளது.

இதன்படி அல்லாஹ்வைப் பற்றி இந்தப் பெண் ஏற்கனவே அறிந்திருக்கலாம், துஆச் செய்த பின் அல்லாஹ்வின் உதவியைக் கண்டதால் பிறகு இஸ்லாத்தை ஏற்றுள்ளார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

என்றாலும் அபூமுஆவியா அஃமஷ் அவர்களின் செய்திகளை நன்கு அறிந்தவர். அவரிடமிருந்து அறிவிக்கும்போது சரியாக அறிவிப்பார். ஆனால் மற்றவர்களின் செய்திகளில் சிறிது தவறிழைப்பார் என்ற விமர்சனம் உள்ளது.

[تقريب التهذيب ص475:]
5841- محمد ابن خازم بمعجمتين أبو معاوية الضرير الكوفي [لقبه فافاه] عمي وهو صغير ثقة أحفظ الناس لحديث الأعمش وقد يهم في حديث غيره من كبار التاسعة مات سنة خمس وتسعين [ومائة] وله اثنتان وثمانون سنة وقد رمي بالإرجاء ع

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறுகிறார்:

முஹம்மத் பின் காஸிம்-அபூமுஆவியா அள்ளரீர் பிறப்பு ஹிஜ்ரி 113
இறப்பு ஹிஜ்ரி 194
வயது: 81
அல்கூபீ, பட்டப் பெயர்: ஃபாஃபாஹ் என்பவர் தன் சிறுவயதில் கண்பார்வையிழந்தவர் ஆவார்.

இவர் பலமானவர். அஃமஷ் அவர்களின் ஹதீஸ்களை மற்றவர்களை விட மிக நன்றாக மனப்பாடம் செய்தவர். ஏனையோரின் ஹதீஸ்களில் சில வேளைகளில் தவறிழைக்கக் கூடியவர்.

இவர் ஒன்பதாம் தலைமுறையைச் சேர்ந்தவர். ஹிஜ்ரி 195-ம் ஆண்டு தனது 82-வது வயதில் காலமானார். மேலும் இவர் முர்ஜியா கொள்கையுடையவர் என்ற விமர்சனம் உள்ளது.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-5841)


1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
    இறப்பு ஹிஜ்ரி 146
    வயது: 85
    —> உர்வா பின் ஸுபைர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: புகாரி-439, 3835, இப்னு குஸைமா-1332, முஃஜம் இப்னுல் அஃராபீ-685, இப்னு ஹிப்பான்-1655, ஷுஅபுல் ஈமான்-1060, …


  • முஃஜம் இப்னுல் அஃராபீ-685.

معجم ابن الأعرابي (1/ 353)
685 – نا مُحَمَّدُ بْنُ يَزِيدَ، نا أَبُو مُعَاوِيَةَ، نا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، نا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ قَالَ: كَانَتِ امْرَأَةٌ تَغْشَى عَائِشَةَ قَالَ: فَكَانَتْ تُكْثِرُ بِمِثْلِ هَذَا الْبَيْتِ:
[البحر الطويل]
وَيَوْمَ الْوِشَاحِ مِنْ تَعَاجِيبِ رَبِّنَا … إِلَّا أَنَّهُ مِنْ بَلْدَةِ الْكُفْرِ نَجَّانِي
فَقَالَتْ لَهَا عَائِشَةُ: مَا هَذَا الْبَيْتُ الَّذِي تَتَمَثَّلِينَ بِهِ؟ قَالَتْ: شَهِدْتُ عَرُوسًا فِي الْجَاهِلِيَّةِ، فَوَضَعُوا وِشَاحَهَا وَأَدْخَلُوهَا مُغْتَسَلَهَا فَأَبْصَرَتِ الْحِدَأَةُ حُمْرَةَ الْوِشَاحِ فَانْحَطَّتْ عَلَيْهِ فَأَخَذَتْهُ قَالَتْ: فَاتَّهَمُونِي قَالَتْ: فَفَتَّشُونِي حَتَّى فَتَّشُوا قُبُلِي قَالَتْ: فَدَعَوْتُ اللَّهَ أَنْ يُبَرِّئَنِي فَجَاءَتِ الْحِدَأَةُ بِالْوِشَاحِ حَتَّى طَرَحَتْهُ وَسَطَهُمْ وَهُمْ يَنْظُرُونَ

…


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.