தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4487

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13

இவ்வாறே, உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக! (எனும் 2:143ஆவது வசனத் தொடர்.)

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் (நபி) நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள், ‘இதோ வந்துவிட்டேன்; என் இறைவா! கட்டளையிடு; காத்திருக்கிறேன்’ என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், ‘(நம்முடைய செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத்துரைத்துவிட்டீர்களா?’ என்று இறைவன் கேட்பான். அவர்கள், ‘ஆம் (எடுத்துரைத்து விட்டேன்)’ என்று சொல்வார்கள். அப்போது அவர்களின் சமுதாயத்தாரிடம், ‘உங்களுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத்தாரா?’ என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், ‘எங்களிடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை’ என்று சொல்வார்கள்.

அப்போது அல்லாஹ், ‘உங்களுக்கு சாட்சியம் சொல்கிறவர் யார்?’ என்று (நூஹிடம்) கேட்க அவர்கள், ‘முஹம்மதும் அவரின் சமுதாயத்தினரும்’ என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே அவர்களும், ‘நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச்செய்தியை) எடுத்துரைத்துவிட்டார்கள்’ என்று சாட்சியம் அளிப்பார்கள்.

மேலும், இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பார். இதையே ‘இவ்வாறே, உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக’ எனும் (திருக்குர்ஆன் 2:143) இறைவசனம் குறிக்கிறது.

‘நடுநிலையான’ (வசத்) என்பதற்கு ‘நீதியான’ என்று பொருள். என அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.
Book : 65

(புகாரி: 4487)

بَابُ قَوْلِهِ تَعَالَى: {وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا} [البقرة: 143]

حَدَّثَنَا يُوسُفُ بْنُ رَاشِدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، وَأَبُو أُسَامَةَ وَاللَّفْظُ لِجَرِيرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، وَقَالَ أَبُو أُسَامَةَ: حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

يُدْعَى نُوحٌ يَوْمَ القِيَامَةِ، فَيَقُولُ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ يَا رَبِّ، فَيَقُولُ: هَلْ بَلَّغْتَ؟ فَيَقُولُ: نَعَمْ، فَيُقَالُ لِأُمَّتِهِ: هَلْ بَلَّغَكُمْ؟

فَيَقُولُونَ: مَا أَتَانَا مِنْ نَذِيرٍ، فَيَقُولُ: مَنْ يَشْهَدُ لَكَ؟

فَيَقُولُ: مُحَمَّدٌ وَأُمَّتُهُ، فَتَشْهَدُونَ أَنَّهُ قَدْ بَلَّغَ: {وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا} [البقرة: 143] فَذَلِكَ قَوْلُهُ جَلَّ ذِكْرُهُ: {وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا} [البقرة: 143] ” وَالوَسَطُ: العَدْلُ


Bukhari-Tamil-4487.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4487.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-3339 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.