தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4547

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 3.

“ஆலு இம்ரான்’ அத்தியாயம்1 (3:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “துக்காத்தன்’ எனும் (வேர்ச்)சொல்லும் (மற்றொரு வேர்ச்சொல்லான) “தகிய்யத்தன்’ எனும் சொல்லும் (“தற்காத்துக்கொள்ளல்’ எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

(3:117ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸிர்ருன்’ எனும் சொல்லுக்கு “கடுங்குளிர்’ என்பது பொருள்.

(3:103ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷஃபா ஹுஃப்ரத்’ (நெருப்புக் கிடங்கின் விளிம்பு) எனும் செற்றொடர் “ஷஃபா அர்ரக்கியத்’ (கிணற்றின் விளிம்பு) போன்றதாகும். “ஷஃபா’ என்பதற்கு “விளிம்பு’ என்பது பொருள்.

(3:121ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “துபவ்விஉ(ல் முஃமினீன மகாஇத லில்கிதால்)’ (நம்பிக்கையாளர்களை உரிய இடங்களில் நிறுத்தும் பொருட்டு) என்பதற்கு “நீங்கள் களம் அமைக்கும் பொருட்டு’ என்பது பொருள்.

(3:125ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “அல்முசவ்விமீன்’ (இனங்காட்டக்கூடிய) எனும் சொல்லின் ஒருமையான) “அல்முசவ்விம்’ (அல்லது “அல்முசவ்வம்) எனும் சொல்லுக்கு ஒரு தோற்றக் குறியால், அல்லது கம்பளியால், அல்லது அதிலுள்ள ஏதேனும் ஒன்றால் அடையாளம் உள்ளது என்று பொருள். (3:146ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ரிப்பிய்யூன்’ (இறைபக்தர்கள்) எனும் சொல் பன்மையாகும். அதன் ஒருமை “ரிப்பிய்யுன்’ என்பதாகும்.

(3:152ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஃத் தஹுஸ்ஸூனஹும்’ எனும் சொற்றொடருக்கு “நீங்கள் அவர்களை (பகைவர்களை) வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தபோது…” என்று பொருள். (3:156ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃகுஸ்ஸின்’ (போர் புரிபவர்கள்) என்பதன் ஒருமை “ஃகாஸின்’ என்பதாகும். (3:181ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “சநக்த்துபு’ (நாம் பதிவு செய்வோம்) எனும் சொல்லுக்கு “நாம் பாதுகாப்போம்’ என்று பொருள். (3:198ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நுஸுல்’ எனும் சொல்லுக்கு “நற்பலன்’ என்பது பொருள். அல்லாஹ்விடமிருந்து கிடைத்த “விருந்தோம்பல்’ என்றும் பொருள் கொள்ளலாம். இது “அன்ஸல்த்துஹு’ (அவனை நான் உபசரித்தேன்) என்பதைப் போன்றதாகும். முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(3:125ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “முசவ்விமீன்’ எனும் சொல் போன்ற) “அல்கைலுல் முசவ்வமா’ என்பதற்கு “நிறையழகுக் குதிரைகள்’ என்று பொருள். சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (3:39ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹஸூர்’ (பற்றற்றவர்) எனும் சொல்லுக்கு “பெண்களிடம் செல்லாதவர்’ என்று பொருள். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (3:125ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மின் ஃபவ்ரிஹிம்’ (இதே நேரத்தில் -திடீர்த் தாக்குதல் தொடுக்க- உங்களிடம் அவர்கள் வந்தாலும்) எனும் சொல்லுக்கு, “பத்ர் நாளில் அவர்கள் கோபத்துடன் உங்களிடம் வந்தாலும்’ என்று பொருள். (“உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை நீ வெளியாக்குகிறாய். உயிருள்ள திóருந்து உயிரற்றதையும் நீ வெளியாக்குகிறாய்’ எனும் 3:27ஆவது வசனத்தின் விளக்கவுரையில்) முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள், “இறைவன் (உயிரற்றதிóருந்து) உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். விந்து உயிரற்றதாக (உடலிலிருந்து) வெளியேறுகிறது; ஆனால், அதிலிருந்து உயிரினம் வெளிப்படுகிறது” என்று கூறினார்கள்.2 (3:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்இப்கார்’ எனும் சொல்லுக்கு “அதிகாலை’ என்பது பொருள். “அல்அஷிய்யு’ என்பதற்குச் “சூரியன் மறையப்போகும் நேரம்’ என்று பொருள்.

பாடம் : 1 இ(ந்த வேதத்)தில் தெளிவான கருத்துள்ள வசனங்களும் இருக் கின்றன (எனும் 3:7ஆவது வசனத் தொடர்) முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (தெளிவான கருத்துள்ள வசனங்கள் என்பது) “ஹலால், ஹராம்’ (“அனுமதிக்கப்பட்டவை, தடை செய்யப் பட்டவை’ பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்) ஆகும். (3:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ உகரு முதாஷாபிஹாத்” (ஒன்றையொன்று ஒத்த வேறு வசனங்களும் உள்ளன) எனும் தொடருக்கு “ஒன்றையொன்று உறுதிப்படுத்துகின்ற வசனங்கள்” என்பது பொருள். எடுத்துக்காட்டாக, “இன்னும் துன்மார்க்கர்களைத் தவிர (வேறு எவரையும்) அவன் வழிதவறச் செய்வதில்லை” என்று (ஒரு வசனத்தில் -2:26) அல்லாஹ் கூறுகின்றான். (மற்றொரு வசனத்தில்-10:100) “சிந்தித்துணராதவர்கள்மீதே அவன் பாவச் சுமையை வைக்கின்றான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (இன்னுமொரு வசனத்தில்-47:17) “எவர் நல்வழி பெற்றிருக்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் நல்வழியை இன்னும் அதிகமாக அளிக்கின்றான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (இவ்வசனங்களில் ஒன்று மற்றொன்றின் கருத்தை வலியுறுத்துகின்றன.)3 (3:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸைஃக்’ (கோணல்) எனும் சொல்லுக்கு “சந்தேகம்’ என்பது பொருள். (இதே வசனத்திலுள்ள) “இப்திஃகாஅல் ஃபித்னத்’ எனும் சொல்லுக்குக் “குழப்பம் செய்ய விரும்புதல்’ என்று பொருள். (இதே வசனத்திலுள்ள) “அர்ராஸிகூன ஃபில்இல்மி’ எனும் தொடரின் பொரு ளாவது: அறிவில் முதிர்ந்தவர்களும் அவற்றின் விளக்கத்தை அறிவார்கள். “இவற்றை நாங்கள் நம்பினோம்’ என்றும் கூறுவார்கள்.4

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் ‘கோணல்’ உள்ளதோ, அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியார். அறிவில் முதிந்தவர்களோ ‘இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன’ என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:7 வது) வசனத்தை ஓதிவிட்டு,

‘முதஷாபிஹாத்தான வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள் தாம் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதைப் புரிந்து கொண்டு) அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்’ என்று கூறினார்கள்.
Book :65

(புகாரி: 4547)

سُورَةُ آلِ عِمْرَانَ ”
تُقَاةٌ وَتَقِيَّةٌ وَاحِدَةٌ، {صِرٌّ} [آل عمران: 117]: بَرْدٌ، {شَفَا حُفْرَةٍ} [آل عمران: 103]: مِثْلُ شَفَا الرَّكِيَّةِ، وَهْوَ حَرْفُهَا، {تُبَوِّئُ} [آل عمران: 121]: تَتَّخِذُ مُعَسْكَرًا، المُسَوَّمُ: الَّذِي لَهُ سِيمَاءٌ بِعَلاَمَةٍ، أَوْ بِصُوفَةٍ أَوْ بِمَا كَانَ، {رِبِّيُّونَ} [آل عمران: 146]: الجَمِيعُ، وَالوَاحِدُ رِبِّيٌّ، {تَحُسُّونَهُمْ} [آل عمران: 152]: تَسْتَأْصِلُونَهُمْ قَتْلًا، {غُزًّا}: وَاحِدُهَا غَازٍ، {سَنَكْتُبُ} [آل عمران: 181]: سَنَحْفَظُ، {نُزُلًا} [آل عمران: 198]: ثَوَابًا، وَيَجُوزُ: وَمُنْزَلٌ مِنْ عِنْدِ اللَّهِ، كَقَوْلِكَ: أَنْزَلْتُهُ ” وَقَالَ مُجَاهِدٌ: {وَالخَيْلُ المُسَوَّمَةُ} [آل عمران: 14]: «المُطَهَّمَةُ الحِسَانُ» قَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى: «الرَّاعِيَةُ المُسَوَّمَةُ» وَقَالَ ابْنُ جُبَيْرٍ: {وَحَصُورًا} [آل عمران: 39]: «لاَ يَأْتِي النِّسَاءَ» وَقَالَ عِكْرِمَةُ: {مِنْ فَوْرِهِمْ} [آل عمران: 125]: «مِنْ غَضَبِهِمْ يَوْمَ بَدْرٍ» وَقَالَ مُجَاهِدٌ: ” يُخْرِجُ الحَيَّ مِنَ المَيِّتِ: مِنَ النُّطْفَةِ تَخْرُجُ مَيِّتَةً، وَيُخْرِجُ مِنْهَا الحَيَّ، الإِبْكَارُ: أَوَّلُ الفَجْرِ، {وَالعَشِيُّ} [الأنعام: 52]: مَيْلُ الشَّمْسِ – أُرَاهُ – إِلَى أَنْ تَغْرُبَ
بَابُ {مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ} [آل عمران: 7]
وَقَالَ مُجَاهِدٌ: ” الحَلاَلُ وَالحَرَامُ، {وَأُخَرُ مُتَشَابِهَاتٌ} [آل عمران: 7]: يُصَدِّقُ بَعْضُهُ بَعْضًا، كَقَوْلِهِ تَعَالَى: {وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الفَاسِقِينَ} [البقرة: 26]، وَكَقَوْلِهِ جَلَّ ذِكْرُهُ: {وَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لاَ يَعْقِلُونَ} [يونس: 100] وَكَقَوْلِهِ: {وَالَّذِينَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًى وَآتَاهُمْ تَقْوَاهُمْ} [محمد: 17] {زَيْغٌ} [آل عمران: 7]: شَكٌّ، {ابْتِغَاءَ الفِتْنَةِ} [آل عمران: 7]: المُشْتَبِهَاتِ، {وَالرَّاسِخُونَ فِي العِلْمِ} [آل عمران: 7]: يَعْلَمُونَ {يَقُولُونَ آمَنَّا بِهِ} [آل عمران: 7]: كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا، وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الأَلْبَابِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ التُّسْتَرِيُّ، عَنِ ابْنِ أَبِي [ص:34] مُلَيْكَةَ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ:

تَلاَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الآيَةَ: {هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الكِتَابَ، مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الكِتَابِ، وَأُخَرُ مُتَشَابِهَاتٌ}، فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الفِتْنَةِ، وَابْتِغَاءَ تَأْوِيلِهِ، وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ، وَالرَّاسِخُونَ فِي العِلْمِ يَقُولُونَ: آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الأَلْبَابِ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِذَا رَأَيْتِ الَّذِينَ يَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ فَأُولَئِكِ الَّذِينَ سَمَّى اللَّهُ فَاحْذَرُوهُمْ»


Bukhari-Tamil-4547.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4547.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-24210 , 24929 , 25004 , 26197 , தாரிமீ-147 , புகாரி-4547 , இப்னு மாஜா-47 , அபூதாவூத்-4598 , திர்மிதீ-2993 , 2994 , …

கூடுதல் தகவல் பார்க்க: முதஷாபிஹாத் ஓர் ஆய்வு .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.