தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4598

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21

அத்தகையோரின் பிழைகளை அல்லாஹ் பொறுக்கக் கூடும். அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும், மன்னிப்பு வழங்குபவனும் ஆவான் எனும் (4:99ஆவது) இறைவசனம்.

 அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுது கொண்டிருந்தபோது, ‘சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று சொல்லிவிட்டு, பிறகு சஜ்தா செய்வதற்கு முன்பாக, ‘இறைவா! (மக்காவில் சிக்கிக் கொண்டிருக்கும்) அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! ஸலமா இப்னு ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் இப்னு வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்யாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக!

இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்கிக் கடுமைப்படுத்துவாயாக! இறைவா! யூஸுஃப் (அலை) அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.
Book : 65

(புகாரி: 4598)

بَابُ قَوْلِهِ: {فَأُولَئِكَ عَسَى اللَّهُ أَنْ يَعْفُوَ عَنْهُمْ وَكَانَ اللَّهُ عَفُوًّا غَفُورًا} [النساء: 99]

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ

بَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي العِشَاءَ إِذْ قَالَ: ” سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، ثُمَّ قَالَ قَبْلَ أَنْ يَسْجُدَ: اللَّهُمَّ نَجِّ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ نَجِّ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ نَجِّ الوَلِيدَ بْنَ الوَلِيدِ، اللَّهُمَّ نَجِّ المُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ





மேலும் பார்க்க: புகாரி-797 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.