பாடம் : 7 உங்கள் மீது இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும் அவனது அன்பும் இல்லாதிருந்தால், எந்த விஷயத்தில் நீங்கள் மூழ்கியிருந்தீர்களோ அதன் விளைவாக, உங்களுக்குப் பெரும் வேதனை நேர்ந்திருக் கும் எனும் (24:14ஆவது) இறைவசனம். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்: (24:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தலக்கவ்னஹு (அதை எடுத்துக் கொண்டி ருந்தீர்கள்) என்பதற்கு உங்களில் சிலர் சிலருக்கு அறிவித்துக் கொண்டிருந்தீர்கள் என்று பொருள். (25:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள அஃபள்த்தும் எனும் சொல்லின் எதிர்கால வினைச்சொல்லும்10:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ளதுமான) துஃபீளூன் என்பதன் பொருள் நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்கள் என்பதாகும்.
ஆயிஷா(ரலி) அவர்களின் தாயார் உம்மு ரூமான்(ரலி) அறிவித்தார்.
தம் மீது அவதூறு கூறப்பட்டபோது (அதைக் கேள்விப்பட்ட) ஆயிஷா மூர்ச்சையடைந்து கீழே விழுந்துவிட்டார்.
Book : 65
(புகாரி: 4751)بَابُ قَوْلِهِ: {وَلَوْلاَ فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ فِي الدُّنْيَا وَالآخِرَةِ لَمَسَّكُمْ فِيمَا أَفَضْتُمْ فِيهِ عَذَابٌ عَظِيمٌ}
وَقَالَ مُجَاهِدٌ: {تَلَقَّوْنَهُ} [النور: 15]: «يَرْوِيهِ بَعْضُكُمْ عَنْ بَعْضٍ» {تُفِيضُونَ} [يونس: 61]: «تَقُولُونَ»
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُلَيْمَانُ، عَنْ حُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ أُمِّ رُومَانَ أُمِّ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ
«لَمَّا رُمِيَتْ عَائِشَةُ خَرَّتْ مَغْشِيًّا عَلَيْهَا»
சமீப விமர்சனங்கள்