தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4764

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நான், ‘அவனுக்குரிய தண்டனை நகரம் தான்’ எனும் (திருக்குர்ஆன் 04:93 வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் ‘அவனுக்குப் பாவமன்னிப்புக் கிடையாது’ என்று கூறினார்கள். புகழுயர்ந்த இறைவனின் ‘மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை’ எனும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனத்தைக் குறித்துக் கேட்டதற்கு, ‘இந்த வசனம் அறியாமைக் காலத்தைப் பற்றியதாகும்’ என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

Book :65

(புகாரி: 4764)

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ قَوْلِهِ تَعَالَى: {فَجَزَاؤُهُ جَهَنَّمُ} [النساء: 93] قَالَ

«لاَ تَوْبَةَ لَهُ»، وَعَنْ قَوْلِهِ جَلَّ ذِكْرُهُ: {لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ} [الفرقان: 68]، قَالَ: «كَانَتْ هَذِهِ فِي الجَاهِلِيَّةِ»





மேலும் பார்க்க: புகாரி-3855 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.