பாடம் : 4 அவர்களில் எவர் மன்னிப்புக் கோரி, இறை நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகிறார் களோ அவர்களைத் தவிர. அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனும் ஆவான் (எனும் 25:70ஆவது இறைவசனம்).
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அப்துர் ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) ‘ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம் தான்..’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 04:93 வது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்கும்படி எனக்கு உத்தரவிட்டார்கள். (அவ்வாறே) நான் அந்த வசனம் குறித்து அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இந்த (திருக்குர்ஆன் 04:93 வது) வசனத்(தின் சட்டத்)தை வேறெந்த வசனமும் மாற்றவில்லை’ என்று கூறினார்கள். ‘அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அவர்கள் அழைப்பதில்லை’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனம் குறித்துக் கேட்கும்படியும் உத்தரவிட்டிருந்தார்கள். அது குறித்து இப்னு அப்பாஸ்(ரலி), ‘இது இணைவைப்போர் விஷயத்தில் அருளப்பெற்றது’ என்று பதிலளித்தார்கள்.
Book : 65
(புகாரி: 4766)بَابُ {إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا، فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا} [الفرقان: 70]
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ
أَمَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبْزَى، أَنْ أَسْأَلَ ابْنَ عَبَّاسٍ، عَنْ هَاتَيْنِ الآيَتَيْنِ: {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا} [النساء: 93] فَسَأَلْتُهُ فَقَالَ: «لَمْ يَنْسَخْهَا شَيْءٌ»، وَعَنْ: {وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ} [الفرقان: 68] قَالَ: «نَزَلَتْ فِي أَهْلِ الشِّرْكِ»
சமீப விமர்சனங்கள்