அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
(ஓதலுக்குரிய) ‘சஜ்தா’ அருளப்பெற்ற முதல் ‘அந்நஜ்கி’ ஆகும். அதை ஓதியபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுக்குப் பின்னால் இருந்த அனைவரும் (அவர்களுடன் சேர்ந்து) ‘சஜ்தா’ செய்தார்கள். ஒரேயொரு மனிதனைத் தவிர!
அம்மனிதன் ஒரு பிடி மண்ணை எடுத்து (தன் நெற்றிக்குக் கொண்டு சென்று) அதன் மீது சஜ்தாச் செய்ததை கண்டேன். பின்னர் அவன் (பத்ருப் பேரின் போது) இறைமறுப்பாளனாகக் கொல்லப்பட்டதை கண்டேன். அவன்தான் உமய்யா இப்னு கலஃப் ஆவான்.
Book :65
(புகாரி: 4863)حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، أَخْبَرَنِي أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
أَوَّلُ سُورَةٍ أُنْزِلَتْ فِيهَا سَجْدَةٌ وَالنَّجْمِ، قَالَ: فَسَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَجَدَ مَنْ خَلْفَهُ إِلَّا رَجُلًا رَأَيْتُهُ أَخَذَ كَفًّا مِنْ تُرَابٍ فَسَجَدَ عَلَيْهِ “، فَرَأَيْتُهُ بَعْدَ ذَلِكَ قُتِلَ كَافِرًا، وَهُوَ أُمَيَّةُ بْنُ خَلَفٍ
சமீப விமர்சனங்கள்