பாடம் : 1 (நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் (எனும் 75:16ஆவது இறைவசனம்). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (75:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சுதா எனும் சொல்லுக்கு, வெறுமனே என்று பொருள். (75:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) – யஃப்ஜுர அமாமஹு (எதிர்காலத்திலும் தீமை செய்து கொண்டேயிருக்கவேண்டும் என்று விரும்புகிறான்) என்பதற்கு, வெகு விரைவில் பாவமன்னிப்புக் கோருவேன்; நல்லறங்கள் புரிவேன் என்று சொல்லிக் கொண்டே பாவங்களைச் செய்ய விரும்புகிறான்என்று பொருள். (75:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லா வஸர எனும் சொல்லுக்கு, எந்தப் புக-டமும் இருக்காதுஎன்று பொருள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
தம் மீது ‘வஹீ’ (வேத அறிவிப்பு) அருளப்படும்போது, நபி(ஸல்) அவர்கள் (தாம் இதனை எங்கே மறந்துவிடப் போகிறோமோ என்ற அச்சத்தினால் வேக வேகமாக ஓதி,) தம் நாவை அசைப்பவர்களாக இருந்தார்கள். -அருளப்படும் வேத வசனங்களை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தம் நாவை அசைத்து ஓதினார்கள் என சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்கள்- அப்போது, ‘(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 75:16 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். 2
Book : 65
(புகாரி: 4927)بَابُ
سُورَةِ القِيَامَةِ
وَقَوْلُهُ: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ} [القيامة: 16] وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {لِيَفْجُرَ أَمَامَهُ} [القيامة: 5]: سَوْفَ أَتُوبُ، سَوْفَ أَعْمَلُ، {لاَ وَزَرَ} [القيامة: 11]: لاَ حِصْنَ سُدًى هَمَلًا
حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُوسَى بْنُ أَبِي عَائِشَةَ وَكَانَ ثِقَةً، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَزَلَ عَلَيْهِ الوَحْيُ حَرَّكَ بِهِ لِسَانَهُ – وَوَصَفَ سُفْيَانُ – يُرِيدُ أَنْ يَحْفَظَهُ» فَأَنْزَلَ اللَّهُ: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ} [القيامة: 16]
சமீப விமர்சனங்கள்