வஹ்ப் இப்னு கைசான் அபீ நுஐம் (ரஹ்) அறிவித்தார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உணவொன்று கொண்டுவரப்பட்டது. அவர்களுடன் அவர்களின் வளர்ப்பு மகன் உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்’ என்று கூறினார்கள்.
Book :70
(புகாரி: 5378)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ أَبِي نُعَيْمٍ، قَالَ
أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِطَعَامٍ، وَمَعَهُ رَبِيبُهُ عُمَرُ بْنُ أَبِي سَلَمَةَ، فَقَالَ: «سَمِّ اللَّهَ، وَكُلْ مِمَّا يَلِيكَ»
Bukhari-Tamil-.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-5378.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
- இந்த செய்தி வெளிப்படையில் பார்க்கும் போது முன்கதிஃ என்று தெரிந்தாலும் வஹ்ப் பின் கைஸான்-அபீ நுஐம் (ரஹ்) அவர்கள், உமர் பின் அபூஸலமா (ரலி) அவர்களிடம் செவியேற்றுள்ளார் என்பதால் இந்த செய்தி முத்தஸில் (அறிவிப்பாளர் தொடர் முறிவுறாதது) என்பதால் சரியானதாகும். (மேலும் இவர், உமர் பின் அபூஸலமா (ரலி) அவர்களை விட மூத்த நபித்தோழர்களிடமும் ஹதீஸ்களை கேட்டுள்ளார்) (நூல்: அத்தம்ஹீத்-1738)
2 . இந்தக் கருத்தில் வஹ்ப் இப்னு கைசான் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-2698 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20450 , புகாரி-5378 , குப்ரா நஸாயீ-6727 , 10039 , …
மேலும் பார்க்க: புகாரி-5376 .
சமீப விமர்சனங்கள்