அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸர் தொழுகை தொழுவார்கள். அப்போது சூரியன் (வானில்) உயர்ந்தே இருக்கும்; (அஸ்தமனத்தை நெருங்கும்போது ஏற்படும் நிறமாற்றம் ஏற்படாமல்) தெளிவாகவே இருக்கும். (அஸ்ர் தொழுதுவிட்டு மதீனாவை அடுத்திருக்கும்) மேட்டுப் பகுதி (கிராமங்)களுக்குச் செல்பவர் அங்கு சென்று சேரும்போதும் சூரியன் உயர்ந்தே இருக்கும்.
சில மேட்டுப் பாங்கான பகுதிகள் மதீனாவிலிருந்து நான்கு மைல் அல்லது கிட்டத்தட்ட அந்த அளவு தூரத்தில் அமைந்திருந்தன. (இது முத்ரஜ் ஆகும். இது ஸுஹ்ரீ அவர்களின் கூற்று என மஃமர் அவர்களின் அறிவிப்பிலிருந்து தெரிகிறது)
Book :9
(புகாரி: 550)حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ:
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي العَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى العَوَالِي، فَيَأْتِيهِمْ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»
وَبَعْضُ العَوَالِي مِنَ المَدِينَةِ عَلَى أَرْبَعَةِ أَمْيَالٍ أَوْ نَحْوِهِ
Bukhari-Tamil-550.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-550.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸுஹ்ரீ —> அனஸ் (ரலி)
பார்க்க: மாலிக்-11 , அஹ்மத்-12644 , 13235 , 13272 , 13331 , தாரிமீ-1244 , புகாரி-550 , 551 , 7329 , முஸ்லிம்-1094 , 1095 , இப்னு மாஜா-682 , அபூதாவூத்-404 , நஸாயீ-496 , 506 , 507 ,
- மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> இஸ்ஹாக் —> அனஸ் (ரலி)
பார்க்க: மாலிக்-10 , புகாரி-548 , முஸ்லிம்-1096 , நஸாயீ-506 ,
- ரிப்யீ பின் ஹிராஷ் —> அபுல்அப்யள் —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-12331 , 12726 , 12912 , 13434 , நஸாயீ-508 ,
- அப்துர்ரஹ்மான் பின் வர்தான் —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-13181 ,
சமீப விமர்சனங்கள்