தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5590

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 6

மதுவை அனுமதிக்கப்பட்டதாகக் கருதுகின்றவன் குறித்தும், அதற்கு மாற்றுப் பெயர் சூட்டுகின்றவன் குறித்தும் வந்துள்ளவை.

 அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்ம் அல்அஷ்அரீ (ரஹ்) கூறினார்:

‘அபூஆமிர் (ரலி)’ அல்லது ‘அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)’ என்னிடம் கூறினார்கள் – அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்)

நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.

இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், ‘நாளை எங்களிடம் வா’ என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.

அத்தியாயம்: 74

(புகாரி: 5590)

بَابُ مَا جَاءَ فِيمَنْ يَسْتَحِلُّ الخَمْرَ وَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ

وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، حَدَّثَنَا عَطِيَّةُ بْنُ قَيْسٍ الكِلاَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَنْمٍ الأَشْعَرِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبُو عَامِرٍ أَوْ أَبُو مَالِكٍ الْأَشْعَرِيُّ، وَاللَّهِ مَا كَذَبَنِي: سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ، يَسْتَحِلُّونَ الحِرَ وَالحَرِيرَ، وَالخَمْرَ وَالمَعَازِفَ، وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ، يَرُوحُ عَلَيْهِمْ بِسَارِحَةٍ لَهُمْ، يَأْتِيهِمْ – يَعْنِي الفَقِيرَ – لِحَاجَةٍ فَيَقُولُونَ: ارْجِعْ إِلَيْنَا غَدًا، فَيُبَيِّتُهُمُ اللَّهُ، وَيَضَعُ العَلَمَ، وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ القِيَامَةِ


Bukhari-Tamil-5590.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-5590.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-5187.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47280-ஹிஷாம் பின் அம்மார் பின் நுஸைர் என்பவர் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவர் பலமானவர் என்றும் புத்திசாலி என்றும் பாராட்டியுள்ளார். இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். அல்ல என்றும் கூறியுள்ளாா். மேலும் இவர் ஸுவைத் பின் அப்துல்அஸீஸ் வழியாக அறிவிக்கும் செய்திகள் (ஸுவைத் பலவீனமானவர் என்பதால்) பலவீனமானது என்றும் கூறியுள்ளார்.
  • இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அவர்கள் ஸதூக்-நம்பகமானவர் (சுமாரானவர்) என்று கூறியுள்ளார். இவ்வாறே அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோரும் கூறியுள்ளனர்.
  • அபூஸுர்ஆ அவர்கள், இவரிடமிருந்து ஹதீஸைக் கேட்காதவர்கள் 10 ஆயிரம் ஹதீஸ்களை இழக்க நேரிடும் என்று பாராட்டியுள்ளார்.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இவர் ஸதூக்-நம்பகமானவர் என்று கூறியிருப்பதுடன் இவர் மிகவும் மதிப்பு மிக்கவர்; புத்திசாலி என்று பாரட்டியுள்ளார். (இவ்வாறு இவர் குணத்தைப் பற்றி பலர் பாராட்டியுள்ளனர்.)

இவரைப் பற்றிய விமர்சனங்கள்:

1 . குர்ஆன் படைக்கப்பட்டது என்று இவர் கூறினார் என்ற தகவல் கிடைத்ததால் இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் இவரை வழித் தவறியவர், தடுமாறியவர் என்று விமர்சித்தார்…

2 . இவர் முதியவரான போது இவரின் மனனத் தன்மை மாறி விட்டது. (அப்போது அவரிடத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்துச் செய்திகளையும் மற்றவர்களுக்குப் படித்துக் காட்டுவார். தனக்கு சொல்லப்படுவதையெல்லாம் பிறகுக்கு எடுத்துச் சொல்பவராக இருந்தார். (அதாவது தல்கீனை ஏற்பவராக இருந்தார்…விவரம்). இதற்கு முந்தைய காலத்தில் இவர் அறிவித்தவை மிகச் சரியானது என்றும், இவர் ஸதூக் என்ற தரத்தில் உள்ளவர் என்றும் இமாம் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார். (இவர் தல்கீனை ஏற்பவர் என்று ஆரம்பகால அறிஞர் மஃன் அவர்களும் கூறியுள்ளார்)

3 . இவர் அறிவிக்கும் 400 ஹதீஸ்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம் விமர்சித்துள்ளார்.

4 . இவர் ஹதீஸை அறிவிப்பதற்கு கூலி வாங்குவார் என்று சிலர் விமர்சித்துள்ளனர்…

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/66, தஹ்தீபுல் கமால்-30/242, தாரீகுல் இஸ்லாம்-5/1272, ஸியரு அஃலாமின் நுபலா-11/420, மீஸானுல் இஃதிதால்-‌‌9234, 4/302, தத்கிரதுல் ஹுஃப்பால்-458, 2/29, தஹ்தீபுத் தஹ்தீப்-4/276, தக்ரீபுத் தஹ்தீப்-1/1022…)

1 . மேற்கண்ட 4 வகையான விமர்சனங்களுக்கும் சில அறிஞர்கள் பதில் கூறியுள்ளனர்…

2 . தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இவரைப் பற்றிய குறை, நிறை விமர்சனங்களிலிருந்து இவர் பலமானவர் என்றே முடிவு செய்துள்ளார். இதற்கு அடையாளமாக இவரைப்பற்றிய குறிப்பில் صح என்று கூறியுள்ளார். இதன் கருத்து அல்அமலு அலா தவ்ஸீகிஹீ-இவர் பலமானவர் என்பதே முடிவாகும் (அமலாகும்) என்பதாகும். (மீஸானுல் இஃதிதால்-‌‌9234, 4/302).

3 . மேலும் இந்த செய்தியை அப்துர்ரஹ்மான் பின் யஸீதிடமிருந்து பிஷ்ர் பின் பக்ர் அவர்களும் அறிவித்துள்ளார். அது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.

(பார்க்க: அபூதாவூத்-4039 , குப்ரா பைஹகீ-6100)

எனவே ஹிஷாம் பின் அம்மார் இந்த செய்தியின் விசயத்தில் தவறு செய்யவில்லை என்று தெரிகிறது. ஹிஷாம் அவர்களின் மீது உள்ள விமர்சனத்தை ஏற்றுக் கொண்டாலும் அல்லது இந்த செய்தியை இவர் அறிவித்தது மூளை குழம்புவதற்கு முன்பா? அல்லது பின்பா? என்பது அறியப்படாவிட்டாலும் இந்த செய்தி ஸஹீஹுன் லிகைரீ என்ற தரத்தில் உள்ளதாகும்.

  • இந்த செய்தியை இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 456
    வயது: 72
    அவர்கள், முன்கதிஃ என்று கூறி, இசையை கூடும் என்று கூறியுள்ளார். என்றாலும் இப்னுஸ் ஸலாஹ்,பிறப்பு ஹிஜ்ரி 577
    இறப்பு ஹிஜ்ரி 643
    வயது: 66
    இப்னு ரஜப், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்ற பல அறிஞர்கள் இவரின் கருத்தை மறுத்துள்ளனர்.
  • இப்னு ரஜப் அவர்கள், புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் இங்கு ஹத்தஸனா-எங்களுக்கு அறிவித்தார் போன்ற வார்த்தையை கூறாமல் “ஹிஷாம் கூறினார் என்று கூறியிருந்தாலும் அவரும் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்களின் ஆசிரியர் தான் என்பதால் இது அறிவிப்பாளர்தொடர் முறிந்த செய்தி அல்ல என்று கூறியுள்ளார்.

(நூல்: நுஸ்ஹதுல் அஸ்மாஇ-2/449,  …)

(மேலும் தத்லீஸ் செய்யாதவர்கள் இவ்வாறு அறிவித்தால் அது விமர்சனம் ஆகாது என்பது ஹதீஸ்கலையில் உள்ள ஒரு விதியாகும். புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் தத்லீஸ் செய்பவர் அல்ல என்று கூறியும் இந்த செய்தியை மவ்ஸூல் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்)

  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இந்த செய்தி சரியானது; இதில் எந்தக் குறையும் இல்லை என்றும், இப்னு ஹஸ்மின் கருத்து தவறானது என்பதையும் விளக்கிக் கூறியுள்ளார்.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-10/52, தஃக்லீகுத் தஃலீக்-5/22)

  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களும் இந்த செய்தியை ஹிஷாம் மட்டும் தனித்து அறிவிக்கவில்லை. பிஷ்ர் பின் பக்ர் அவர்களும் அறிவித்துள்ளார் என்பதால் இது சரியானது என்றும், இப்னு ஹஸ்மின் கருத்து தவறானது என்பதையும் விரிவாக விளக்கிக் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-91)

ஆய்வுக்காக: ஹிஷாம் பின் அம்மார் .

1 . இந்தக் கருத்தில் அபூஆமிர் (ரலி) அல்லது அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
அல்அஷ்அரீ (ரலி) வழியாக
வரும் செய்திகள்:

  • ஹிஷாம் பின் அம்மார் —>…அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்ம்  —> அபூ ஆமிர் (ரலி) அல்லது அபூ மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    அல்அஷ்அரீ (ரலி)

பார்க்க: புகாரி-5590 , இப்னு ஹிப்பான்-6754 , அல்முஃஜமுல் கபீர்-3417 , குப்ரா பைஹகீ-610020988 ,

  • பிஷ்ர் பின் பக்ர் —>…அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்ம்  —> அபூ ஆமிர் (ரலி) அல்லது அபூ மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    அல்அஷ்அரீ (ரலி)

பார்க்க: அபூதாவூத்-4039 , குப்ரா பைஹகீ-6100 ,

…முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-23758 , அஹ்மத்-22900 , இப்னு மாஜா-4020 , அபூதாவூத்-3688 , இப்னு ஹிப்பான்-6758 , அல்முஃஜமுல் கபீர்-3419 , குப்ரா பைஹகீ-17383 , 20989 ,

  • ரபீஆ பின் அம்ர் —> அபூ மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    அல்அஷ்அரீ (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-3410 ,

…இன்ஷா அல்லாஹ் கூடுதல் தகவல்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.