பாடம் : 27
பட்டுத் துணியை விரிப்பாகப் பயன்படுத்துதல்.
அபீதா பின் அம்ர் அஸ்ஸல்மானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பட்டை விரிப்பாகப் பயன்படுத்தவது, அதை அணிவதைப் போன்று(தடை செய்யப்பட்டது)தான்.
ஹுதைஃபா இப்னு அல்யமான் (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்கள் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும், அவற்றில் உண்ண வேண்டாமென்றும், (ஆண்கள்) சாதாரண பட்டையும் அலங்கார பட்டையும் அணிய வேண்டாமென்றும், பட்டின் மீது அமர வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
Book : 77
(புகாரி: 5837)بَابُ افْتِرَاشِ الحَرِيرِ
وَقَالَ عَبِيدَةُ: «هُوَ كَلُبْسِهِ»
حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
«نَهَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَشْرَبَ فِي آنِيَةِ الذَّهَبِ وَالفِضَّةِ، وَأَنْ نَأْكُلَ فِيهَا، وَعَنْ لُبْسِ الحَرِيرِ وَالدِّيبَاجِ، وَأَنْ نَجْلِسَ عَلَيْهِ»
சமீப விமர்சனங்கள்