தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6187

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 106

“என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள்; என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது இதை அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.213

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் ‘காசிம்’ என்று பெயர் சூட்டினார். அப்போது மக்கள் “நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்துத் தீர்ப்பு) கேட்காத வரை (குழந்தையின் தந்தையான) அவரை, ‘அபுல் காசிம் (காசிமின் தந்தை) என்ற குறிப்புப் பெயரால் அழைக்கமாட்டோம்” என்று கூறினர். (அவ்வாறே நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம்.)

அப்போது நபி (ஸல்) அவர்கள், “என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள்; ஆனால், எனது (‘அபுல்காசிம்’ எனும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 78

(புகாரி: 6187)

بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَمُّوا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي» قَالَهُ أَنَسٌ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ سَالِمٍ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:

وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ القَاسِمَ، فَقَالُوا: لاَ نَكْنِيهِ حَتَّى نَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «سَمُّوا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي»


Bukhari-Tamil-.
Bukhari-TamilMisc-6187.
Bukhari-Shamila-6187.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




மேலும் பார்க்க:  புகாரி-3114 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.