பாடம் : 125
தும்மல் விரும்பத்தக்கது; கொட்டாவி விரும்பத்தகாதது.258
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு (‘யர்ஹமுக்கல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்’ என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும். ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், யாரேனும் (கட்டுப்படுத்தாமல்) ‘ஹா’ என்று (கொட்டாவியால்) சப்தமிட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.
இதை அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book : 78
(புகாரி: 6223)بَابُ مَا يُسْتَحَبُّ مِنَ العُطَاسِ وَمَا يُكْرَهُ مِنَ التَّثَاؤُبِ
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ المَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِنَّ اللَّهَ يُحِبُّ العُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ، فَحَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يُشَمِّتَهُ، وَأَمَّا التَّثَاؤُبُ: فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِذَا قَالَ: هَا، ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : முஸ்னத் தயாலிஸீ-2434 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3322 , அஹ்மத்-7599 , 9530 , 10707 , திர்மிதீ-2746 , 2747 , புகாரி-6223 , 6226 , அபூதாவூத்-5028 , குப்ரா நஸாயீ-9972 , 9973 , முஸ்னத் அபீ யஃலா-6627 , இப்னு குஸைமா-922 , இப்னு ஹிப்பான்-598 , 2358 , ஹாகிம்-7683 , 7686 , குப்ரா பைஹகீ-3575 ,
, அஹ்மத்-8631 , அல்அதபுல் முஃப்ரத்-921 , 927 , புகாரி-6224 , அபூதாவூத்-5033 ,
கொட்டாவி
அஹ்மத்-10695 , அல்அதபுல் முஃப்ரத்-942 , புகாரி-3289 , முஸ்லிம்-5718 , இப்னு மாஜா-968 , திர்மிதீ-370 ,
தும்மலை பற்றி விரிவான விளக்கம் ஹதீஸில் உள்ளதா?
தும்மிய உடன் ஏன் நமை அல்லாஹ் நன்றி செலுத்த சொல்கிறான்
தும்முவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது
தும்முவதால் நம் உடலில் இருந்து எவ்வளவு கிரிமிகள் வெளியாகிறது
தும்முவதால் எந்த எந்த உறுப்பில் இருந்து கிருமிகள் வெளியாகிறது
தும்பும்போது அல்லாஹ் நம் வாயைய் மூடும்படி உபதேசம் உள்ளதா
அஸ்ஸலாமு அலைக்கும்
தும்மல் பற்றிய விளக்கம் பார்க்க- https://www.bayanapp.indiabeeps.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b9%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2/