பாடம் : 7
உறங்கச் செல்லும் போது ஓத வேண்டியது.
ஹுதைஃபா இப்னு அல்யமான் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ‘பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’ ( (இறைவா!) உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள்.
(உறக்கத்திலிருந்து) எழும்போது ‘அல்ஹம்து லில்லாஹில்தீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.
அத்தியாயம்: 80
(புகாரி: 6312)بَابُ مَا يَقُولُ إِذَا نَامَ
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ المَلِكِ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ بْنِ اليَمَانِ، قَالَ:
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ، قَالَ: «بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا» وَإِذَا قَامَ قَالَ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ»
Bukhari-Tamil-6312.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-6312.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் ஹுதைஃபா பின் யமான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-23271 , 23286 , 23369 , 23391 , 23459 , தாரிமீ-2728 , புகாரி-6312 , 6314 , 6324 , 7394 , அல்அதபுல் முஃப்ரத்-1205 , இப்னு மாஜா-3880 , அபூதாவூத்-5049 , திர்மிதீ-3417 , …
…அஹ்மத்-23244 , திர்மிதீ-3398 ,
2 . அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: புகாரி-6325 .
3 . பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-5252 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
..அபூஹுரைரா
..வஹ்ப் பின் அப்துல்லாஹ்…
சமீப விமர்சனங்கள்