தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6820

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25

(பெருநாள்) தொழுகைத் திடலில் கல்லெறி தண்டனை நிறைவேற்றுதல்.

 ஜாபிர் (ரலி) அறிவித்தார்.

பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (மாஇஸ் இப்னு மாலிக்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுத் தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம்அளித்தார். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘உமக்குப் பைத்தியமா?’ என்று கேட்டார்கள். அவர், ‘இல்லை’ என்றார். எனவே நபி (ஸல்) அவர்கள், அவருக்குத் தண்டனை வழங்குமாறு உத்தரவிட பெருநாள் தொழுகைத் திடல் (முஸல்லா) அருகில் அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் குறித்து நல்லதைக் கூறியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தார்கள்.

அறிவிப்பாளர்களான யூனுஸ் இப்னு யஸீத் (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோர் ‘அவருக்கு (ஜனாஸா) தொழவைத்தார்கள்’ என்பதைக் கூறவில்லை.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய என்) இடம் ‘நபி (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழவைத்தார்கள் என்ற தகவல் சரியானதா?’ என வினவப்பட்டது. ‘(ஆம்) அறிவிப்பாளர் மஅமர் (ரஹ்) அவர்கள் அவ்வாறே அறிவித்தார்கள்’ என்று பதிலளித்தேன். ‘மஅமர் அல்லாதோர் அவ்வாறு அறிவித்துள்ளனரா?’ என்று கேட்கப்பட்டது. ‘இல்லை’ என்று கூறினேன்.

Book : 86

(புகாரி: 6820)

بَابُ الرَّجْمِ بِالْمُصَلَّى

حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ:

أَنَّ رَجُلًا مِنْ أَسْلَمَ، جَاءَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاعْتَرَفَ بِالزِّنَا، فَأَعْرَضَ عَنْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ مَرَّاتٍ، قَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبِكَ جُنُونٌ» قَالَ: لاَ، قَالَ: «آحْصَنْتَ» قَالَ: نَعَمْ، فَأَمَرَ بِهِ فَرُجِمَ بِالْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الحِجَارَةُ فَرَّ، فَأُدْرِكَ فَرُجِمَ حَتَّى مَاتَ. فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرًا، وَصَلَّى عَلَيْهِ

لَمْ يَقُلْ يُونُسُ، وَابْنُ جُرَيْجٍ، عَنِ الزُّهْرِيِّ: «فَصَلَّى عَلَيْهِ». سُئِلَ أَبُو عَبْدِ اللَّهِ: فَصَلَّى عَلَيْهِ، يَصِحُّ؟ قَالَ: رَوَاهُ مَعْمَرٌ، قِيلَ لَهُ: رَوَاهُ غَيْرُ مَعْمَرٍ؟ قَالَ: لاَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.