தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6821

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26

குற்றவியல் தண்டனைக்குரியதல்லாத பாவம் ஒன்றை ஒருவர் செய்துவிட்டு அது குறித்து (ஆட்சித்) தலைவரிடம் தெரிவித்தால்..? அவர் பாவமன்னிப்புக் கோரி மனம் திருந்திய பின்னால் அவர் ஆட்சித் தலைவரிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்டுவந்தால் அவருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது.

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், இத்தகைய மனிதருக்கு நபி (ஸல்) அவர்கள் தண்டனை வழங்கவில்லை என்று சொன்னார்கள்.

இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ரமளான் மாதத்தில் (பகல் நேரத்தில்) தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்ட ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை. மேலும், (இஹ்ராம் கட்டிய நிலையில்) மான் வேட்டையாடிய (கபீஸா என்ப)வரை உமர் (ரலி) அவர்கள் தண்டிக்கவில்லை. மேலும், இந்தத் தலைப்பை ஒட்டி நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.37

 அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

ஒருவர் ரமளான் மாதத்தில் (நோன்பு வைத்துக்கொண்டு) தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டு விட்டு (இது குறித்து) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இதற்குப் பரிகாரமாக விடுதலை செய்ய உன்னிடம் ஓர்அடிமை உண்டா?’ என்று கேட்டார்கள். அவர், ‘இல்லை’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘இரண்டு மாதங்கள் உம்மால் நோன்பு நோற்க முடியுமா?’ என்று கேட்டார்கள். அவர், ‘இல்லை (இயலாது)’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக!’ என்றார்கள்.38

Book : 86

(புகாரி: 6821)

بَابٌ: مَنْ أَصَابَ ذَنْبًا دُونَ الحَدِّ، فَأَخْبَرَ الإِمَامَ، فَلاَ عُقُوبَةَ عَلَيْهِ بَعْدَ التَّوْبَةِ، إِذَا جَاءَ مُسْتَفْتِيًا
قَالَ عَطَاءٌ: «لَمْ يُعَاقِبْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» وَقَالَ ابْنُ جُرَيْجٍ: «وَلَمْ يُعَاقِبِ الَّذِي جَامَعَ فِي رَمَضَانَ» وَلَمْ يُعَاقِبْ عُمَرُ، صَاحِبَ الظَّبْيِ وَفِيهِ عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ،

أَنَّ رَجُلًا وَقَعَ بِامْرَأَتِهِ فِي رَمَضَانَ، فَاسْتَفْتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «هَلْ تَجِدُ رَقَبَةً» قَالَ: لاَ، قَالَ: «هَلْ تَسْتَطِيعُ صِيَامَ شَهْرَيْنِ» قَالَ: لاَ، قَالَ: «فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.