தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-689

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ்(ரலி) அறிவித்தார்:

நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை குதிரையின் மீது ஏறியபோது கீழே விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களின் வலது விலாப் புறத்தில் அடி பட்டது. எனவே அவர்கள் ஒரு தொழுகையை உட்கார்ந்தவாறே தொழுதார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்தவாறு தொழுதோம்.

நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் இமாம் பின்பற்றப் படுவதற்ககாகவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் நின்று தொழுதால் நின்று நீங்களும் நின்று தொழுங்கள். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள். அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள். அவர் ஸமி அல்லாஹு லிமன் ஹமீதஹ் என்று சொன்னால் நீங்கள் ரப்பனா வலகல் ஹம்து என்று செல்லுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் உட்கார்ந்தது தொழுதால் நீங்கள் எல்லோரும் உட்கார்ந்து தொழுங்கள் என்று கூறினார்கள்.

இமாம் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் என்று கூறியது நபி(ஸல்) அவர்களுக்கு விபத்தின்போது ஏற்பட்ட முந்தைய நோயின்போது ஆகும். மரண நோயின்போது நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதபோது அவர்களுக்கு பின்னால் மக்கள் நின்று தொழுதார்கள். அவர்களை உட்காருமாறு நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. கடைசியாக உள்ளதைதான் எடுத்துக் கொள்ள வேண்டும். கடைசியாக உள்ளது நபி(ஸல்) அவர்களின் இச்செயல்தான் என ஹுமைதி குறிப்பிடுகிறார்கள்.
Book :10

(புகாரி: 689)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكِبَ فَرَسًا، فَصُرِعَ عَنْهُ فَجُحِشَ شِقُّهُ الأَيْمَنُ، فَصَلَّى صَلاَةً مِنَ الصَّلَوَاتِ وَهُوَ قَاعِدٌ، فَصَلَّيْنَا وَرَاءَهُ قُعُودًا، فَلَمَّا انْصَرَفَ  قَالَ: ” إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا صَلَّى قَائِمًا، فَصَلُّوا قِيَامًا، فَإِذَا رَكَعَ، فَارْكَعُوا وَإِذَا رَفَعَ، فَارْفَعُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا وَلَكَ الحَمْدُ، وَإِذَا صَلَّى قَائِمًا، فَصَلُّوا قِيَامًا، وَإِذَا صَلَّى جَالِسًا، فَصَلُّوا جُلُوسًا أَجْمَعُونَ

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: قَالَ الحُمَيْدِيُّ: قَوْلُهُ: «إِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا» بهُوَ فِي مَرَضِهِ القَدِيمِ، ثُمَّ صَلَّى بَعْدَ ذَلِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا، وَالنَّاسُ خَلْفَهُ قِيَامًا، لَمْ يَأْمُرْهُمْ بِالقُعُودِ، وَإِنَّمَا يُؤْخَذُ بِالْآخِرِ فَالْآخِرِ، مِنْ فِعْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.